சனி, 4 செப்டம்பர், 2010

நீதிபதிகள் தேர்வுக் குழுவில் வன்னியர்களுக்கு இடம்: ராமதாஸ் கோரிக்கை

First Published : 04 Sep 2010 12:58:48 AM IST


நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை நட
சென்னை, செப். 3: நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் மூவர் குழுவில் வன்னியர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.உயர்  நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமகவின் வழக்கறிஞர் அமைப்பான வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:தமிழகத்தில் 20 சதவீத வன்னியர்கள் உள்ளனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே ஒரு வன்னியர் மட்டுமே நீதிபதியாக இருக்கிறார். இதனை வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும், அவமானமாகவும் கருதுகிறோம்.இது பற்றி பாமக, காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சியும் பேசுவதில்லை. திமுக, அதிமுகவில் உள்ளவர்கள் இது பற்றி பேசினால் அவர்களை கட்சியை விட்டே நீக்கி விடுவார்கள். ஆனால், மற்ற சமுதாயத்துக்கு அநீதி இழைக்கப்பட்டால் அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுக்கிறார்கள். நாங்கள் பேசினால், இந்த காலத்தில் ஜாதி பேசுகிறீர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை தேவை. எந்தத் தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர் என்பதை உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் தெளிவாக்க வேண்டும்.50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட முதல்வர் கருணாநிதியின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். போராடி அந்தப் பதவியை பெற்றுத் தந்ததாக அவரே என்னிடம் கூறினார். 50 ஆயிரம் மக்கள் தொகை சமுதாயத்துக்கும் ஒரு நீதிபதி பதவி. சுமார் 2 கோடி மக்கள் தொகை கொண்ட சமுதாயத்துக்கும் ஒரு நீதிபதி பதவி. இது என்ன நியாயம்?நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என எத்தனை காலத்துக்குதான் கெஞ்சி கேட்பது. நீதிபதிகளைத் தேர்வு செய்ய அமைக்கப்படும் மூவர் குழுவில் வன்னியர்களையும் சேர்க்க வேண்டும். இதனைக் கேட்டால் தகுதி அடிப்படையில்தான் நியமனம் என்கிறார்கள். இப்போதுள்ள நீதிபதிகள் எல்லாம் தகுதி அடிப்படையில் வந்தவர்கள்தானா?நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை பாமகவும், வன்னியர் சங்கமும் தொடர்ந்து போராடும் என்றார் ராமதாஸ்.பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, என்.டி. சண்முகம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழ் நல அடிப்படையில் நிலையான செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு உள்ள மரு.இராமதாசு அவர்கள், தமிழ்நாடு வன்னியர் முன்னேற்றக் கட்சி எனத் தன் கட்சியின் பெயரை மாற்றிக் கொண்டு இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது நல்லது. தமிழ் சார் பணிகளுக்குத் தனியாக ஓர் அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழ்ப்பணியை ஆற்றலாம். அனைத்துச் சாதியினருக்குமான பொதுவான கட்சியில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சார்பாகப்போராடுவது கட்சியின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும். தமிழ்ப் பணிகளுக்குத் தடையாக அமையும். மக்கள் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தமிழ் எழுச்சியை ஏற்படுத்தி வரும் அவர் தன்னைச் சாதித்தலைவராக அடையாளம் காட்டிக் கொள்வதை விட தமிழுக்காகச் சாதித்த தலைவராக அடையாளம் காட்டிக் கொள்வதே நிலையான பயனைத் தரும். அல்லது வன்னிய அமைப்பு ஒன்றைப் புதிதாக உருவாக்கி அதன் மூலம் சாதிப் பணிகளை ஆற்றிப் பாட்டாளி மக்கள் கட்சியில் சாதி வாடை வீசாமல் பார்த்துக் கொள்ளலாம். பிற சாதியினர் அவரது கோரிக்கையில் நியாயம் இருந்தாலும் புறக்கணிப்பார்கள் என்ற வருத்தத்தில் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/4/2010 8:18:00 PM
டை ராமதாஸ் எல்லாம் உனக்குன நாங்க என்ன உன் ???????????????? பண்டா கரடி ராமதாஸ்
By இந்திய நேசன்
9/4/2010 5:18:00 PM
ஐயா வழி நடப்போம். டேய் லூசு அந்நியன் , உன் பெயரை கூட உன்னால் சொல்ல முடியாத கோழை பயலே . நீ வீர வன்னியர் பற்றி பேச என்ன தகுதி இருக்கு. இன்னொரு நை கோழி னு சொந்த பெயரை போடாமல் கொக்கரிகிறது . உங்கள் இனத்திற்கு இப்படி ஒரு தலைவன் இல்லையே என்ற பொறமை உங்களுக்கு. MBC கோட்டா யார் பெற்று தந்தது . 108 ஜாதிகளுக்கும் கேடைதது யாரால், வன்னியர் உயர் தியாகத்தால் கிடைத்தது என்பதை மறக்க வேண்டாம். "சமுதாயம் காப்பது சத்ரியன் தர்மம் - வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"
By vijayabhaskar
9/4/2010 1:12:00 PM
பெரும்பான்மை மக்களுக்கு சமூகநீதி கிடைக்கவேண்டும் என்றுப் போராடினால் எத்தனைப் பேருக்கு வயிறு எரியுதுப் பாருங்கள். சமூகநீதி என்பது அனைத்துத் துறைக்கும்ப் பொருந்தும். நீதித்துறைக்குப் போருந்தாததுபோல் இங்கு சிலர் கருத்து எழுதுகிறார்கள். எங்கள் வன்னிய இனம் என்றும் கிரிமினல் செயல்களில் ஈடுப்பட்டதுக் கிடையாது. நீதியை நிலைநாட்டுவதற்காக பல வழக்குகள், அடக்குமுறைகளை எம்மினம் அனுபவித்திருக்கிறது. "வன்னியன்" இந்த உலகத்தில் நீதியை நிலைநாட்ட, பண்பாட்டைக் காக்க, மக்களைக் காக்கப் பிறந்தவர்கள். ஊரை ஏமாற்றும் கூட்டம், வேஷம் போடும் கூட்டம், ஜால்ரா கூட்டம், வன்னியருக்கு எதிராகவும், "தமிழினப் போராளி" மருத்துவர் அய்யாவுக்கு எதிராகவும் கருத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கும். சூரியனைப் பார்த்து நாய்க் குரைத்தாலும் அதன் புகழ் மங்குவதில்லை. இங்குக் குறைத்திருக்கும் சில நாய்கள், நாம் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள்தான். வன்னியப் பேரினமே இந்த உலகத்தைப் புரிந்துக்கொள்வோம், அய்யாவின் வழியில் போராடுவோம்!! வெற்றிப் பெறுவோம்!!!
By அழகாபுரம்.இரா.தங்கதுரை.
9/4/2010 9:48:00 AM
அந்நியன், நான் நினைத்தேன் நீங்க சொலி டீங்க
By kozhi
9/4/2010 8:25:00 AM
yes it is very ugly.How can a learned man as DR.S.R raise such demand. how can others respect him . it is mere politics for covering his JATHI votes now swing to DMK ,ADMK & DMDK
By selvaraju
9/4/2010 8:04:00 AM
although ramadoss is iritaing in many issues,in this judges issues some truth in it vellalar
By gnan
9/4/2010 7:21:00 AM
இதில் வேடிக்கை ஒன்றும் இல்லை. அதிக அளவில் தமது இனத்துக்காரர்கள் கிரிமினல் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை 'வெளியே' கொண்டு வர சாதிக்காரர்களே நீதிபதிகளாக தேவை என்று எதிர்பார்க்கிறார்.
By அந்நியன்
9/4/2010 6:34:00 AM
...very dangerous and ugly Game !
By KARUNANITHI
9/4/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக