Wednesday, September 1, 2010
ஆங்கிலம் துணுக்குகள் 18 (Common Mistakes in English - have vs has)
தொண்டரே! வணக்கம். நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். தமிழில் குறிப்பிடுகையில் தமிழ் மரபிற்கேற்பவே குறிக்க வேண்டும் என. நீங்களோ தொடர்ந்து ஆங்கில முறையிலேயே தமிழில் குறிக்கும் தவறான வழக்கத்தைப் பின்பற்றுகிறீர்கள். நான் இதனைப் படித்தேன் என்பதை அவ்வாறே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதாகக் கூறி I this read என்று சொல்லும் அறியாமையை அரங்கேற்றுவீர்களா? தமிழில் தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழ் உலகத்தை மேலும் தடுமாறி விழச் செய்ய முயல்கிறீர்களே! சொற்களைப் புரிந்து கொள்ள அவ்வாறு குறிப்பதாகக் கருதினால் பின்வருமாறு எழுதுங்கள்.
I have a computer. (என்னிடம்/இருக்கிறது /ஒரு/ கணிணி) நான் ஒரு கணிணி வைத்துள்ளேன். I என்றால் நான் எனப பொருள்; என்றாலும் I have என்றால் இங்கு என்னிடம் என்னும் பொருளில் வருகிறது.
have கொண்டிருத்தலைக் குறிக்கும். உடைமையைக் குறிக்கும் இச் சொல் சேருவதால் நான் கணிணியை உடையவனாக உள்ளேன் என்னும் பொருள் வ்ருகிறது. எனினும் என்னிடம் கணிணி உள்ளது என்று சொல்வதே தமிழ் வழக்கு - என விளக்கலாம் அல்லவா? மேலும்,
கணிணி என்று எழுதுவதுதான் சரி. எனவே, கணினி எனத் தவறாகக் குறிக்க வேண்டா. ஆங்கிலத்தைக் கற்பிப்பதன் மூலம் தமிழையும் கற்பிப்பதாக உங்கள் பயிற்சி அமைய வேண்டுமே தவிர தமிழைச் சிதைப்பதாக இருக்கக் கூடாது. செய்வனத் திருந்தச் செய்ய வேண்டும் அல்லவா? உங்களின் தொண்டு நல்வழியில் தொடர வாழ்த்துகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக