வியாழன், 2 செப்டம்பர், 2010

ஜெயலலிதாவுக்கு அக்டோபர் 7-ல் பாராட்டு விழா


சென்னை, செப். 1: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு இந்திய சமூக நீதி பாதுகாவலர் பட்டம் வழங்கும் விழா அக்டோபர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.÷அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி ஆகியோர் இது தொடர்பாக சென்னையில் புதன்கிழமை கூறியதாவது: ÷தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடரும் வகையில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. ÷இதையடுத்து, தமிழ்நாடு இடஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றியதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டி, அவருக்கு இந்திய சமூக நீதி பாதுகாவலர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.÷இதற்கான விழா சென்னையில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற உள்ளது என்றனர்.
கருத்துக்கள்

பாராட்டு ஆணவத்தை வளர்க்க உதவுமேயன்றி வழிநடத்த உதவாது. இவ்வாறெல்லாம் பாராட்டுவது மூலம் அவர்தான் நாளை ஆட்சி அமைக்கப் போகிறார் என்னும் கனவை அவருள்ளே விதைத்து வீழ்ச்சிக்கு வழி வகுக்கின்றனர். ஆரிய எண்ணத்தை அகற்றித் தமிழிய எண்ணததைத் தமக்குள் விதைத்துக் கொண்டார் எனில் காலம காலமாக உலகம் அவரைப் பாராட்டும். உண்மையிலேயே தமிழ் நலச் செயல்பாடுகளில் கருத்து செலுத்திப் பாடுபட்டார் எனில் அவர் கனவாகி அவரும் நலம் பெறுவார். நாடும் நலம்பெறும். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக