திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நிருபமா ராவ் இன்று இலங்கை பயணம்


சென்னை, ஆக.29: இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் 3 நாள் பயணமாக இலங்கைக்கு திங்கள்கிழமை செல்கிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளுக்கு நிருபமா ராவ் செல்கிறார். தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் இந்திய அரசின் திட்டம் குறித்தும் இந்தப் பயணத்தின் போது அவர் ஆய்வு செய்ய உள்ளார். தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.க்களை கொழும்பில் புதன்கிழமை (செப்டம்பர் 1) சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். அடுத்த மாத இறுதியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை செல்ல உள்ள நிலையில், நிருபமா ராவின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையில் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு   500 கோடியை வழங்கியது. ஆனால், அங்கு மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறவில்லை எனவும், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் முகாம்களில் வாழ்வதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உண்மை நிலையைக் கண்டறிய சிறப்புப் பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனை தெரிவித்திருந்தார். அவரது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, இலங்கைக்கு மத்திய அரசின் உயர் அதிகாரி  அனுப்பப்படுவார் என்று மன்மோகன் சிங் அறிவித்தார்.  முன்னதாக, முதல்வர் கருணாநிதியை சென்னையில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி நேரில் சந்தித்து நிருபமா ராவ் இதுதொடர்பாக பேச்சு நடத்தினார். அப்போது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றை சீரமைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்வு செய்வது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
கருத்துக்கள்

சீனாவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள். இந்தியா எஞ்சியுள்ள தமிழர்களை ஒழிப்பதற்கான வன்கொடுமை கொலை ஆயுதங்களையும் வேதியல் குண்டுகளையும் தொடர்ந்து வழங்கும். பாக்கிசுதானுடன் தொடர்பு கொள்ள வேண்டா. இந்தியாவே ஈழ ஆதரவுத் தலைவர்களை ஒழித்து விட்டு பன்னாட்டு அவைகளில் சிங்களத்திற்குச் சார்பாகக் குரல் கொடுக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும். தமிழர்கள் இல்லாத பூமியாக இலங்கையை ஆக்கும் சிங்களத்தின் எல்லா முயற்சிகளுக்கும் நாங்கள் துணை நிற்போம். அருள் கூர்ந்து சிங்களத்தின் கொத்தடிமையாக இந்தியா இருக்க இசைவு தாருங்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதற்காகத்தான் இநதியா என்னை அனுப்பி வைத்துள்ளது. இந்தியத்தின் பாதுகாவலனே! புறக்கணிக்காதீர் எம்மை! என மண்டியிடச் செல்லும் செயலருக்கு வாழ்த்துகள். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/30/2010 4:35:00 AM
India attempts to camouflage the assistance given to Sri Lankan forces at the final war. [ Sunday, 29 August 2010, 03:29.43 PM GMT +05:30 ] Sri Lanka states, some Indian forces had been alleged for assisting the Sri Lankan forces, at the final stage of war in Sri Lanka, will visit Sri Lanka to learn about war issues. The Indian Military group will visit Sri Lanka next week to learn the methods for the defeats faced by the Liberation tigers were mentioned by Military Commander Jagath Jayasooriya. A Bangladesh Military team will visit Sri Lanka to learn on this situation, hence arrangements are being done to take the team, to the areas where the final war took place to provide training sessions against war was mentioned by Military Commander. Reports states such action is initiated by India to hide the accusations that Indian forces assisted the Sri Lankan forces at the final war in Sri Lanka. But opposes have cropped up in Tamil Nadu and amidst the Central Opposition party sec
By George
8/30/2010 2:15:00 AM
WHAT FOR THIS WOMAN IS GOING THERE? TO PLAN AND KILL THE REMAINING TAMIL POPULATION. STILL 150 000 PEOPLE ARE LIVING IN THE NAZI STYLED CAMPS EVENN AFTER END OF THE BARBARIC TAMIL ETHNIC CLEANSING. EVEN TWO ELECTIONS IN KASHMIR HAS NOT BROUGHT TRUE PEACE. SO HOW COULD THIS STUPID VISITS WITHOUT ANY PLANS COULD BRING PEACE THERE. THE CALM IN THE TAMIL NATION IS NOT A TRUE ONE. IT WILL EXPLODE ONE DAY.
By paris Ejilan
8/30/2010 1:47:00 AM
வீட்டுல சோருவடுச்சு...குழம்பு வச்சு.... ஒரு வா ருசியா சோறு குடுக்கமுடியாத பொம்பள...பட்டணம் போயி பாராளப் போறாளாம் !...இந்தப் பக்கம் சீனக் காரன் குடுக்குற கொடச்சல சமாளிக்க முடியாள ...அந்தப் பக்கம் பாகிஸ்தான் காரண அடக்க முடியாள ..பங்களாதேஷ் தீவிரவாதிய தடுக்க முடியாள...இந்த லட்சணத்துல இந்தப் பொம்பள இலங்கைக்குப் போயி ஒரு மணி நேரத்துல ஒரு இனத்தை மீட்டு...வீடு கட்டிக் கொடுத்துப் புடுவாங்கலாம் ! கருணாநிதி மூளை இப்போ வறண்டு போயி ஒழுங்க வேலை செய்ய மாட்டேங்குது !!! ஆடும் வரை ஆடட்டும் என்று இனி விடமுடியாது !!! @.....
By கொல்லங்குடி கருப்பாயி
8/29/2010 11:21:00 PM
போஸ்னியா...யுகோஸ்லாவகியா..குரோவசிய...போன்ற நாடுகளில் கலவரத்திற்குப் பின் அமைதிநிலை திரும்பியதும் ஐரோப்பிய யூனியன் ..மக்களின் புனர் அமைப்பிற்கு நிதியினை தாராளமாக வழங்கி ...ஒரு தனி அதிகாரியை ..கமிசனர் அதிகாரத்தில் நியமித்து கண்காணித்தது ! இவ்வாறு இருக்கையில் இந்தியா இலங்கைக்கு வெளியுறவு செயலரை அனுப்புவது தமிழர் பிரச்சனையை கையாள்வதற்கு கிடையாது ! தனி அதிகாரி நியமனத்தை...அல்லது தமிழர்கள் பகுதியில் செய்யப்படும் பணிகளை பார்வையிட இலங்கை அனுமதி தராமல் நிராகரித்து விட்ட நிலையில் ....மற்றவர்களை முட்டாள் ஆக்க வெளிவிவகாரத் துறை செயலரை வேறு அலுவல் நிமித்தம் விஷயம் செய்ய அனுமதி பெற்று கண்துடைப்பிற்காக இலங்கைக்கு அனுப்புகிறது !ஒரு தனி அதிகாரி சென்றால் பிரச்சனையின் முக்கியத்துவம் என்பது வேறு ! வெளிவிவகாரச் செயலர் பயணம் என்பதற்கு பொருள் வேறு !! உரிய இடத்தில் கருணாநிதி இருந்து கொண்டு தன்குடும்பத்திற்க்கு ஊழல் செய்து சம்பாதித்துக் கொண்டிருப்பதால் ...SORRY...so....Sorry !!! தமிழர்களே! அவரால் எதுவும் செய்ய முடியாள ....கடவுள் உங்களை காப்பாற்றுவாராக !!! @ rajasji
By rajasji
8/29/2010 10:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
++++++++++++++
இலங்கைக்கு வெளியுறவுச் செயலர் நிருபமா இன்று பயணம் : தமிழர் பகுதிகளில் ஆய்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக