செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

இளங்கோவன் ஆதரவாளர்கள் ஆலோசனை


கோவை, ஆக. 30: கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 6 பேரை நீக்கியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.÷கோவையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் இளங்கோவன் புறக்கணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலுவுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர்.  ÷அதையடுத்து கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.யுவராஜ் உள்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.   இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் கோவையில்  ஆலோசனைக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினர். மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி கூறியதாவது:÷கோவையில் சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என்று இளங்கோவன்தான் பெரும் முயற்சி எடுத்தார். ஆனால், அந்த விழாவில் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கமிட்டி புறக்கணித்துவிட்டது.÷இந்தப் புறக்கணிப்பை எதிர்த்து தங்கபாலுவுக்கு கருப்புக் கொடி காட்டுவதாக அறிவித்தனர். இளங்கோவனின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் தள்ளிவைக்கப்பட்டபோதும், 6 பேரை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.÷காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்குவதற்கு தாமோதரன் என்பவருக்கு அதிகாரம் இல்லை. அதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்.÷கட்சியினர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கவில்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
கருத்துக்கள்

விரைவில் போராட்டங்களை அறிவித்து அனைவருமே கட்சியை விட்டு நீங்குங்கள். அப்படியாவது பாவக் கட்சியினர் எண்ணிக்கை குறையட்டும். தி.மு.க.வின் அச்சம் கொஞ்சம் நீங்கட்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/31/2010 3:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக