சென்னை, செப். 18: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளி ராபர்ட் பயஸ், ""தன்னை கருணை கொலை செய்ய உத்தரவிடுமாறு'' முதல்வர் கருணாநிதிக்கு மனு அனுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பயஸ். 14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் நபர்களை, ஆலோசனைக்குழு கூடி விடுதலை செய்வது வழக்கம். ஆனால், ராபர்ட் பயஸ் வழக்கில் 15 ஆண்டுகள் கழித்துதான் ஆலோசனைக் குழு கூடியது. 26.12.2006-ல் கூடிய ஆலோசனைக் குழுவில் சிறைக் கண்காணிப்பாளர் நன்னடத்தை சான்றிதழும், உளவியல் மருத்துவர் தகுதியான சான்றிதழும் அளித்திருந்தனர். ஆனால் இலங்கையில் போர் நடைபெறுகிறது. சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று பல காரணங்களை காட்டி விடுதலை தவிர்க்கப்பட்டது. இதை எதிர்த்து ராபர்ட் பயஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ""அரசு சார்பற்ற அதிகாரிகளை நியமித்து சட்டப்படி மீண்டும் ஆலோசனைக் குழுவைக் கூட்ட வேண்டும்'' என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்து ஓராண்டாகியும், ஆலோசனைக் குழு கூட்டப்படவில்லை. ஆலோசனைக் குழுவை விரைவில் கூட்டக் கோரி மாவட்ட ஆட்சியர், சிறைத்துறை தலைவருக்கு பல தடவை ராபர்ட் பயஸ் மனு செய்தும் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய, மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ராபர்ட் பயஸ் மனு அனுப்பியுள்ளார். அதில், "கடந்த 18 ஆண்டாக குடும்பத்தைப் பிரிந்து தனிமைச் சிறையில் உள்ளேன். தற்போது எனது குடும்பம் இருக்கிறதா? இல்லையா? என்பது கூட தெரியாமல் தவிக்கிறேன். ஏழு ஆண்டுகள் முடிவடைந்த சிறைவாசிகளை கூட விடுதலை செய்தீர்கள். நானோ 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ன்படி மாநில அரசு, மத்திய அரசிடம் விடுதலை செய்வதற்கு முன் ஆலோசனை செய்தல் வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் சாசனம் 161 பிரிவின்படி மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டியதில்லை என்று கூறிய பின்னரும், மத்திய அரசிடம் தெரிவிக்காமல் விடுவிக்க முடியாது என்று மாநில அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர். இவைகளை பார்க்கும்போது அரசியல் உள்நோக்கங்கள் காரணமாகவே நியாயமும், நீதியும் மறுக்கப்படுகிறது என்பது வெளிச்சமாகிறது. எனது நீண்ட கால சிறைவாசம், குடும்ப சூழ்நிலையைக் கொண்டு விடுதலை செய்யுங்கள். இல்லையெனில் கருணை கொலை செய்துவிடுங்கள். அல்லது பட்டினி சாவு மேற்கொள்வதையாவது இடையூறு செய்யாமல் விட்டுவிடுங்கள்'' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.சிறையில் எம்.ஏ. வரலாறு: இவர் சிறையில் இருந்தபடியே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு, இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினி பயிற்சி, ஊட்டச்சத்து, தந்தை பெரியார் பாலிடெக்னிக் மையத்தின் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகளை முடித்துள்ளார்.
தம்மை நாட்டுப் பற்றாளராகக் காட்டிக் கொள்வதற்காக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் கையாளுவதே தமிழகத் தலைமையின் பழக்கம். எனவே, சிறையிலேயே இயல்பான முறையில் இறக்கட்டும் என எதிர்பார்க்கும் தமிழக அரசு ஒன்றும் செய்யாது. விழிப்புணர்வும் மனித நேயமும் அற்ற நம் மக்களால் எந்தப் பயனும் இல்லை. கடவுளுக்கும் காப்பாற்றும் திறன் இல்லை. இருந்திருந்தால் நூறாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை வஞ்சகமான கொடூரமான முறைகளில் சாக விட்டிருப்பாரா? பாவம் வேறு என்னதான் செய்ய முடியும்? எனவேதான் கருணைக் கொலை கேட்கின்றார். ஆட்சிப் பொறுப்பை விரும்பாத மக்கள் நலத் தலைவர் தோன்றி மக்களை விழிப்படையச் செய்து புரட்சி ஏற்படுத்தினாலன்றி விடிவு கிடையாது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
9/19/2009 3:34:00 AM
These courts give their ruling long after all the damages are done. The justice system many times favours the countries' local ruling parties and selfish people. To give quick and right judgement, the Judges should be corrupt free and shoudn't be controlled by external forces. Else how can we expect justice for Tom, Dick and Harry. Delaying justice without trials is also big injustice. How can they allow people to suffer in jails without trials. The life imprisonment in India is 12 yrs and they release before the term due to goodfaith. How come they can keep for 18 yrs - more than the max imprisonment. Why should he go after so many people to look his case? Are other people, human-rights, politicians in India are deaf and dumb? How many people are suffering in Asian jails, without having strength to speak out?
9/19/2009 3:28:00 AM
Please Allah's Sons give lessons to India because Indians(Not TN Tamils except Karunnanidhi and his family and Congress Leaders) were supported killing innocent Tamils in Tamileelam still Indians doing. this Ramadan will Indians should learn about pain of death. If happened I will converted to Islam. All Indians Should pay for Our Eelam Tamils Death. No one can not escape. God is upthere.Remember it. All Indians should pay for Our deaths
9/19/2009 1:16:00 AM