வெள்ளி, 18 செப்டம்பர், 2009

கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு



சென்னை, செப். 17: "ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவை நகரில் அடுத்த ஆண்டு நடத்தப்படும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மாநாட்டைத் தொடங்கி வைத்து தமது தலைமை உரையை முடிக்கும் போது, "பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதையேற்று, 9-வது உலகத் தமிழ் மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்த அரசு முடிவு செய்துள்ளது' என்றார். இதன்பின், அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ""1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பீடம் ஏறியதும் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, பல்வேறு நாடுகளிலும் தமிழகத்திலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் கோவை நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் மாதத்தில் சிறப்பாக நடத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆலோசனை... உலகத் தமிழ் மாநாடு குறித்து சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்புடன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். 1995-ம் ஆண்டு, தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது விழாவின் சிறப்பு அலுவலராக இறையன்பு நியமிக்கப்பட்டார். அப்போது செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அவரிடம் தலைமைச் செயலாளர் கேட்டறிந்ததாக, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டை நடத்துவதற்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், பல்வேறு குழுக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.

கருத்துக்கள்

அரசு அறிவிப்பிற்குக் காரணமான தினமணிக்குப் பாராட்டுகள். உலகத் தமிழ் மாநாட்டில் ஒரு நாள் முழுமையும் தமிழ்க் கலைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற வேண்டும். வெறும் கலை நிகழ்ச்சிகளால் கலை வளராது. எனவே, கலைப் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் தேவை. இதற்கு முன்பு அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது கோயம்புத்தூரில் உலகத் தமிழ் மாநாடு நடத்தலாம என அப்போதைய கல்வி அமைச்சர் தம்பிதுரை தெரிவித்தார். ஆனால், இது காற்றோடு போயிற்று. ஆனால், கலைஞர் நடத்திக் காட்டுவார். இக் கருத்தரங்கத்தில் உலகத் தமிழர்களின் வாழ்வுரிமைகள் குறித்தும் ஓர் அமர்வு இருத்தல் வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2009 2:23:00 AM

Oh yea! This is vwery important to improve the conditions of Tamiliams and the country. Instead of wasting billions of rupees on this totally wasteful exercise, I wish the money is utilized to improve the lives of tamilians. Improve roads, school infra structure, build high tech hospitals, etc. I think MK wants to see this in his last period.

By NathUS
9/18/2009 2:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக