புதன், 16 செப்டம்பர், 2009

அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க முடியாது: மக்களவை அதிகாரி



புதுதில்லி, செப்.16- நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க முடியாது என்று மக்களவையின் தலைமைச் செயலர் பி.டி.டீ. ஆச்சாரி கூறியுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும் எம்.பி.,க்களும் தங்களுக்கு தமிழில் கேள்வி எழுப்பவும் பதில் தரவும் அனுமதி தரவேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரியிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க அனுமதி இல்லை என்று மக்களவை தலைமைச் செயலர் கூறியுள்ளார். எனினும், உறுப்பினர்கள் தமிழில் கேள்வி கேட்கலாம், பேசலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், இந்த விதிமுறை அமைச்சர்களுக்குப் பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் அமைச்சர்கள் பதில் தர விதிமுறையில் இடமுள்ளது என்றும் அவர் குறிப்பி்ட்டார்.


கருத்துக்கள்

'நாடாளுமன்றத்தில் தமிழில் விடை அளிக்க முடியாது' என்று சொல்வதற்கு யாரும் உரிமை இல்லை. தற்போதைய விதிகளுக்கு இணங்க இயலவில்லை என்னும் உண்மையைக் கூறலாம். இவ்விதிகளை மாற்றி உடனே தமிழில் விடையிறுக்க வாய்ப்பு நலன்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே நம் கோரிக்கை. இதனை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2009 4:45:00 PM

Hidiya iruntha enna? englisha iruntha than enna? athellam pesuravanga prchanai, inga irunthu porathuthan pesurathe illiye appuram ennathukk ivvalavu DTEAIL...

By Suja
9/16/2009 4:31:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக