வியாழன், 17 செப்டம்பர், 2009

முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்

16 September, 2009 by admin

வன்னிக்குச் சென்ற பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி என்பவர் இறுதிவரை முள்ளிவாய்க்கால் பகுதில் இருந்து பின்னர் தடைமுகாமில் இருந்து தற்போது மீண்டு பிரித்தானியா வந்துள்ளார். அவர் பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 10221
இலங்கையில் நடந்த கடைசி 5 நாள் போரில் 20 ஆயிரம் தமிழர்கள் பலி; நேரில் பார்த்த பெண் தகவல்

லண்டன், செப். 18-

இவரது திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. எனவே, வீட்டை விட்டு புறப்பட்ட அவர் கொழும்பு வந்தார். அங்கு தனது உறவினர்களுடன் தங்கியிருக்க வன்னிக்கு சென்றார்.
அப்போது தான் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இந்த சண்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அங்கேயே தங்கியிருப்பது என முடிவு செய்தார்.
அப்போது, இலங்கை ராணுவம் அங்கு முன்னேறியது. சுமார் 3 லட்சம் மக்களும் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அங்கிருந்த தமிழ் வாணி காயமடைந்த மக்களுக்கு உதவி செய்ய ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கும் குண்டு வீசப்பட்டது. இதில் 50 பேர் பலியாயினர்.
கடைசியாக நடந்த தாக்குதலின்போது லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தமிழ்வாணியும் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார். 4 மாதங்கள் கழித்து சமீபத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.இதை தொடர்ந்து லண்டன் சென்ற அவர் அங்குள்ள ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது வன்னியில் கடைசி 5 நாட்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட் டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் போரின்போது மக்கள் பட்ட அவலங்களையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டதையும் மனம் உருக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக