சனி, 19 செப்டம்பர், 2009

இலங்கைத் தமிழர் விவகாரம்: மத்திய அரசு தலையிட வேண்டும்- திமுக வலியுறுத்தல்



புது தில்லி, செப். 18: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று மத்திய அரசிடம் திமுக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், தில்லியில் வெள்ளிக்கிழமை, தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தார். அப்போது இலங்கைத் தமிழர்கள் குறித்து திமுக கொண்டுள்ள கவலையை தெரிவித்ததுடன், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் அவரிடம் வலியுறுத்தினார். இலங்கையில் உள்நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று பிரதமரிடம் மாறன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று பிரதமர் அவரிடம் உறுதி அளித்தார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் உடனிருந்தார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாக கடந்த மாதம், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் தமிழக முதல்வர். அதற்கு, "இலங்கைத் தமிழர்கள் குறித்து மத்திய அரசு கவலை அடைந்திருப்பதாகவும், அங்குள்ள தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவிகளை செய்திடுமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தப்படும்' என்று முதல்வருக்கு எழுதியிருந்த பதிலில் பிரதமர் உறுதி அளித்திருந்தார். ஆனால் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்கள்

இந்த நாடகம் அரசியல் மேடையில் எத்தனை நாளம்மா? எத்தனை நாளம்மா? அழிப்பு வேலைக்கு உதவிக் கொண்டே கண்டன நாடகம் எத்தனை நாளம்மா? எத்தனை நாளம்மா? அழிக்கும் போக்கை அறிந்த பின்னும் போடும் நாடகம் எத்தனை நாளம்மா? எத்தனை நாளம்மா? தமிழர் யாருமில்லை என்றபின்தான் நிற்குமா அம்மா? நிற்குமா அம்மா? இவர்களை நம்பி வாழும் அவலம் எத்தனை நாளம்மா? எத்தனை நாளம்மா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 4:10:00 AM

சங்கிலியன் ஒரு ஸ்ரீலங்காவில் வாழும் சிங்களக் கைகூலி சக்கிலியன். தெற்கு ஆசிய நாடுகளைப் போல் மனிதனேயமற்ற உதவாக்கறை நாடுகள் உலகத்தில் எங்கும் இல்லை

By Thamizhan
9/19/2009 2:56:00 AM

ஆமா,அங்க காம்புல நிக்கிற சனத்தத எல்லாம் வெளிய விட்டீங்கலேண்டால் பிறகு வெளிநாட்டில் இருக்குற எங்களையெல்லாம் ஐரோப்பா காரனும்,கனடியனும் அங்க பிரச்சனை இல்லைதானே நீங்க சிறிலங்காவுக்கு போங்கோ எண்டு எங்களை கலைப்பான்.

By Sangiliyan,Canada
9/19/2009 12:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக