செவ்வாய், 11 ஜனவரி, 2011

No scheme for peace in Ilangai-chandrika: இலங்கையில் நிரந்தர அமைதித் திட்டம் அரசிடம் இல்லை:சந்திரிகா புகார்

இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டுமானல் அங்கே  தனித்தனி உரிமையுடைய இலங்கை-ஈழக்கூட்டரசு நாடுகள்  மலர வேண்டும். ஆனால், தமிழர்க்கு எதிரான கொலை வெறிச் செயலில் ஈடுபடுவதுடன் மக்களையும் கொலை வெறி உணர்விற்கு ஆளாக்கும் புத்தசமயத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் படைத்தலைவர்களும் இருக்கும் பொழுது அமைதி எப்படி ஏற்படும்? கண்ணீர்த்துளி போல்காட்சியளித்துக் குருதிக் கடலாக மாறியுள்ள இலங்கையில் மக்கள் நலமாக வளமாக அமைதியாக வாழ அங்கே உள்ள புத்த சமயத் தலைவர்களை நாடு கடத்த வேண்டும். அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் வெறி ஊட்டுபவர்கள் அவர்கள்தாம். உண்மையான  புதத நெறியைப் பரப்ப எண்ணும் இளந்துறவிகளிடம் சமயப் பொறுப்பை ஒப்படைத்துப் போரில்லாத் தீவாக அமைதி தவழும் தீவாக மக்கள் உரிமையுடன் வாழும் நாடுகளாக மாற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
 
இலங்கையில் நிரந்தர அமைதித் திட்டம் அரசிடம் இல்லை:
 
சந்திரிகா புகார்

First Published : 10 Jan 2011 02:39:59 PM IST

Last Updated : 10 Jan 2011 02:45:04 PM IST

கொழும்பு, ஜன.10- இலங்கையில் நிரந்தரமாக அமைதியை ஏற்படுத்தும் திட்டம் ராஜபட்ச அரசிடம் இல்லை என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."இலங்கையில் சுமார் 20 லட்சம் தமிழர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளபோது பலமான நாட்டை உருவாக்க முடியாது" என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக