வெள்ளி, 14 ஜனவரி, 2011

share in the govt. : கூட்டணி எதுவானாலும் ஆட்சியில் பங்கு: ஈவிகேஎசு. இளங்கோவன்

மக்களிடம் செல்வாக்கு இல்லாத பொழுதே கொலைகாரக் கட்சியில்  இருந்து இந்த ஆட்டம் போடும் இவர் முதலமைச்சர் ஆக வேண்டுமா? தாங்கவே தாங்காது தமிழ்நாடு! சிறையில் இருந்து கனவு காணச் செய்வோம்! தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


கூட்டணி எதுவானாலும் ஆட்சியில் பங்கு: ஈவிகேஎஸ். இளங்கோவன்

ரோடு, ஜன. 13: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆட்சியில் பங்கு கோரும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார்.  ÷ஈரோட்டில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:  தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும். சென்னை அரசு தலைமை மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த முதல்வருக்கு நன்றி.  ÷திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பஸ் நிலையத்தில் காமராஜர், கக்கன் சிலை அமைக்கவும், கடகனேரியில் காமராஜர் சிலை அமைக்கவும் அமைச்சர் பூங்கோதை, எம்எல்ஏ அப்பாவு ஆகியோர் தடையாக உள்ளனர். இவர்களை முதல்வர் கண்டிக்க வேண்டும். சிலை அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தியாகி சுடலைமுத்து நாடார் வரும் 19-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இப் போராட்டத்தை அவர் சிறிது காலம் ஒத்தி வைக்க வேண்டும்.  ÷இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டோம் என கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த மத்திய அரசிடம் முதல்வர் பேசி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மணல் விலையேற்றம்: தமிழகத்தில் லோடு கணக்கில் விற்றுக்கொண்டிருந்த செங்கல், மணல் இப்போது எண்ணிக்கை, கிலோ கணக்கிலும் விற்பனை செய்யப்படும் அளவுக்கு விலையேற்றம் கண்டுள்ளன. இதனால் கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது. தமிழக அரசின் தெளிவற்ற கொள்கைகளே இதற்குக் காரணம். இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆட்சியில் பங்கு: தமிழகத்தில் இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி குறித்த இறுதி முடிவை கட்சித் தலைமை அறிவிக்கும்.  ஒருவருக்குப் பதவி கொடுக்க முடியவில்லை என்ற கோபத்தில் சட்ட மேலவையை எம்ஜிஆர் கலைத்தார். யாருக்கோ பதவி கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் சட்ட மேலவையை கருணாநிதி மீண்டும் கொண்டு வந்திருக்கலாம்.  வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆட்சியில் பங்கு கோருவதோடு, அந்த ஆட்சியில் முதன்மையான இடத்தைப் பெறுவோம்.  அரசியல்வாதிகள் அனைவருக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த எண்ணம் எனக்கும் உள்ளது. நான் ஏழை. இதனால் காங்கிரஸ் கட்சி குறித்து திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்துள்ள கருத்துக்கு கருத்து தெரிவிக்க இயலாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக