வெள்ளி, 14 ஜனவரி, 2011

kalaignar request to celebrate thamizh new year: தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள்: கருணாநிதி வேண்டுகோள்

முதல்வர் வேண்டுகோளை ஏற்றுத் தமிழர் திருநாளையும் தமிழ்ப்புத்தாண்டையும் சிறப்பாக வரவேற்போம்! இப்புத்தாண்டாவது ஊழலற்ற  ஆண்டாகவும் தமிழ்நாட்டில் தமிழ் தலைமையும் தமிழர் முதன்மையும் பெறும் ஆண்டாகவும் ஈழ மலர்ச்சியை உலகம் வரவேற்கும் ஆண்டாகவும் அமையட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
 

தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள்: கருணாநிதி வேண்டுகோள்


சென்னை, ஜன.13: மட்டிலா மகிழ்ச்சியோடும், மனம் பொங்கும் எழுச்சியோடும் தமிழ்ப் புத்தாண்டு -பொங்கல் திருநாளைக் கொண்டாடுமாறு முதல்வர் கருணாநிதி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்       தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”-எனும் அரிய தமிழ்ப் பண்பாடு போற்றி அறுவடைத் திருநாளாகத் தை முதல் நாளன்று பொங்கல் திருநாள் தமிழகம் முழுதும்  கொண்டாடப்படுகிறது.    தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் 1921-ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 500க்கு மேற்பட்ட தமிழ்ச் சான்றோர் கூடி மேற்கொண்ட முடிவினை ஏற்று, “தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்” என 2008ஆம் ஆண்டில் இந்த அரசு சட்டம் இயற்றியது. அதனைத் தொடர்ந்து, “தமிழ்ப் புத்தாண்டு -பொங்கல் திருநாள்”  எழுச்சியோடும், ஏற்றத்தோடும் கொண்டாடப்படுகிறது.    இந்த ஆண்டில் வரும் 15.1.2011 அன்றும், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளை, முந்தைய ஆண்டுகளைவிட மேலும் சிறப்பாகக் கொண்டாடிட வேண்டுமென தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன்.    தமிழ்ப் புத்தாண்டு நாளாகிய பொங்கல் திருநாளில் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும், வாயில்கள் தோறும் வண்ணக் கோலங்களிடுவீர்!  வீடுகளிலும், வீதிகளிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டிடுவீர்! பொது இடங்களில் வண்ணத் தோரணங்கள் மின்னட்டும்! தென்னை, வாழை, கமுகு, ஈச்ச மரங்களின் குலைகள் குலுங்கட்டும்! தோகை விரிந்த கரும்புகள், இஞ்சி, மஞ்சள் கொத்துக்கள் இன்னபிற எல்லாம் சேர்ந்து எழில் கூட்டட்டும்!    அரசு வழங்கிய பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, முந்திரி, ஏலம், திராட்சை சேர்த்து ஆடவர், மகளிர், அருமைச் சிறார், குடும்பத்தார் நண்பர்கள் கூடிப் பொங்கலிட்டுக் கொண்டாடிக் களித்திடுவீர்!    குடியிருப்புகள்தோறும் கோலப் போட்டிகள், வீரவிளையாட்டுகள், கிராமப்புற நடனங்கள், கும்மி கோலாட்டங்கள் இதர கலைநிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்திடுவீர்! விருதுகளும் பரிசுகளும் வழங்கி ஊக்கமளித்து மகிழ்ந்திடுவீர்!       வீடுகளின் முகப்புகளில் மாலையில் வரிசைவரிசையாய் விளக்குகள் ஏற்றி, வீதியெங்கும் ஒளிக்கதிர் பாய்ச்சிடுவீர்! அதுமட்டுமல்லாமல், அரசுக் கட்டடங்கள், பூங்காக்கள், பாலங்கள் போன்ற பொதுவிடங்கள் அனைத்தும் பொலிவுபெற வண்ண வண்ணமாய்ச் சரவிளக்குகள் அமைத்து அணி செய்திடுவீர்!      உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் வாழ்த்துகள் பரிமாறி தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாளைத் தமிழகமெங்கும் மட்டிலா மகிழ்ச்சியோடும் மனம் பொங்கும் எழுச்சியோடும் கொண்டாடுவீர்!    அரசியல், சாதி, மத, இன வேறுபாடுகளின்றி உழைப்பைப் போற்றி எல்லோரும் இணைந்து கொண்டாடும் இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளை ஆங்காங்கேயுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள், அரசுசார் நிறுவனங்களின் அலுவலர்கள், நல்லுள்ளம் கொண்ட சான்றோர்கள், தமிழ் நெஞ்சங்கள், பொதுமக்கள் என யாவரும் ஒருங்கிணைந்து இந்த வேண்டுகோளை நிறைவேற்றித் தந்திடுவீர்!இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

நீங்கள் சொல்வதை நாங்கள் தலைமுறை தலைமுறையாக செய்துதான் வருகிறோம்.....ஆனால் தமிழ் வருடபிறப்பாக அல்ல.பொங்கல் பண்டிகையாக இப்படித்தான் கொண்டாடுவோம்.எங்களுக்கு தமிழ் வருட பிறப்பு சித்திரை முதல் நாள் தான்....எங்கள் முன்னோர்கள் அறிவாளிகளே...நீர்தான் அறிவிலி.....
By raghu
1/13/2011 9:49:00 PM
நங்கள் கொண்டாடுகிறோம்.நீங்கள் அடுத்த கொள்ளை ai ஆரம்பியுங்கள்.
By ச ச iyer
1/13/2011 9:48:00 PM
பார்த்திபனுக்கு வாழ்த்துகள். .இப்போது எமக்கு பொங்கல் பண்டிகை. 2011 புத்தாண்டின் பொங்கல் வாழ்த்துகள்.
By Tamilian
1/13/2011 9:18:00 PM
அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
By Siva
1/13/2011 9:04:00 PM
சித்திரை முதல் தேதி தான் தமிழ் புத்தாண்டு. சித்திரை மாதம் உழவர்கள் வேளாண்மை செழிக்க நிலத்தை முதலாவதாக உழ ஆரம்பிப்பார்கள் இயற்கையை அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் மாதத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மனிதனுக்கு சிந்திக்க தெரிந்த நாள் முதல் தமிழர்கள் சித்திரையை முத லாவ தாக கொண்டுள்ளார்கள். உலகத்தில் உள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது சித்திரையே.
By மு.நாட்ராயன்
1/13/2011 8:57:00 PM
அனநிவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் (ச.சதீஷ் குமார் ,உடுமலை )
By ச.சதீஷ் குமார்
1/13/2011 7:37:00 PM
epptie kondaduvathu puthandai.
By srini
1/13/2011 7:06:00 PM
நாங்கள் சித்திரை முதல் தேதியை தன தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம்.
By Jai
1/13/2011 5:28:00 PM
பொங்கல் பண்டிகையை கிருத்துவர்களும் முஸ்லீம்களும் கொண்டாடுவது கிடையாது. எனவே, பொங்கல் பண்டிகை ஹிந்துக்கள் பண்டிகையே. கிருத்துவர்களையும் முஸ்லீம்களையும் கொண்டாடுமாறு கருணாநிதியால் சொல்ல முடியுமா?
By NAGARAJAN
1/13/2011 5:13:00 PM
உலகமே கூடி ஒரு முடிவை எடுத்தாலும் அல்லது ஒரு செயலை செய்தாலும் அதில் தப்பே வராது என்று கருதாமலிருப்பதும் 'அதுதான் சரி' என்று கண்ணை மூடிக்கொண்டு ஏற்காமல் காரண காரியங்களை ஆராய்வதும்தான் அறிவுடைமை!
By நசுருதீன் ஜித்தாஹ்
1/13/2011 5:12:00 PM
மீனவாகள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துங்க.. இல்லையென்றால் இலங்கை கடற்படையோடு சண்டையிடுவதற்கு எங்களுக்கு அனுமதி வாங்கி கொடுங்கள்... உங்கள் ஊழலை திசைதிருப்ப எம் மீனவர்களை பலி இடாதீர்கள்.
By tamizhinian
1/13/2011 5:01:00 PM
தையை எப்படி அய்யா தமிழ்ப்புத்தாண்டாக் கொண்டாடுறது? உங்க தகுடு தத்த வேலைய எப்போத்தான் நிறுத்துவீங்க தலைவரே!
By அப்பாவி
1/13/2011 3:05:00 PM
அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
By R.Parthiban
1/13/2011 2:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக