வியாழன், 13 ஜனவரி, 2011

Singala killed thamizh fisher man: இலங்கைக் கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் சாவு

அடிமை நாட்டில் இன்றைக்குச் சிங்களரால் பலியான  தமிழக மீனவர்கள் என்று தனியே நாள்தோறும் ஓர் அறிவிப்பை வெளியிடுங்கள். தன் நாட்டு மக்களைக் காப்பாற்றக்கூட வக்கற்ற அரசுகள் அயல்நாட்டு இறையாண்மையைக் காப்பதாகக்கூறிக் கொண்டு மனித நேயத்தைக் கொன்று கொண்டுள்ளன. இந்த அவலம் எப்பொழுது நிற்குமோ? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இலங்கைக் கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் சாவு


மணமேல்குடி, ஜன. 12: புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்.  நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (19). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்.  இந்திய கடல் எல்லைக்குள் 14 "நாட்டிக்கல்' மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதனால், ஜகதாப்பட்டினம் கடற்கரையில் பரபரப்பு நிலவுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக