துணை முதல்வரின் முதல்வராகும் கனவு நனவாக வாழ்த்துகள்! ஆனால் அக்கனவு நனவாக உலகத்தமிழர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்! தமிழும் தமிழரும் முதன்மை பெற்றுத் தன்னுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.14- துணை முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:எல்லாத் திசைகளிலும் நம்பிக்கை ஒளியைப் பரவச்செய்கிறது புத்தாண்டு சூரியன். இது தமிழ்ப் புத்தாண்டு. தமிழர்களின் புத்தாண்டு. திமுக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளுமே சாதனைத் திருநாள்தான். மகிழ்ச்சி பொங்கிய நாட்கள்தான். அவற்றைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள் தமிழக மக்கள்.தமிழ் மகளாம் தை மகளை வரவேற்கும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு நாளில் இல்லங்கள்தோறும் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடவேண்டும் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதல்வர். ஒவ்வொரு இல்லத்திலும் ஒளிப்பூக்கள் பூத்துக் குலுங்கின என்கிற அளவுக்கு மாநிலமெங்கும் ஒளிரட்டும் புத்தாண்டு விளக்குகள். சூரியன் இல்லாமல் பகல் இல்லை, பொழுது இல்லை, விடியல் இல்லை என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. தமிழர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். சூரியக் கதிர்களின் துணையுடன்தான் புத்தாண்டும் புலர்கிறது. அந்த வெளிச்சம் என்றென்றும் வாழ்வில் நிலைப்பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் மாலைவேளையில் இல்லங்கள்தோறும் ஒளிவிளக்குகள் பூத்துக் குலுங்கட்டும். முதல்வரின் வேண்டுகோளை ஆணையாக ஏற்போம். ஆறாவது முறையாகவும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கப்போகும் திமுக தலைவர் கருணாநிதி இன்னும் நிறைவேற்றவுள்ள அரிய பல திட்டங்களுக்கும் சாதனைகளுக்கும் கட்டியம் கூறும் வகையில் ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும், கூடத்திலும், மாடத்திலும் ஒளிரட்டும் விளக்குகள். அகல் விளக்கு, குழல் விளக்கு, வண்ணவண்ண ஒளி விளக்கு என வகைவகையான விளக்குகளால் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம். நம்பிக்கை ஒளி பெருகட்டும் !நம் தலைவரின் சாதனைகள் தொடரட்டும் !!இனிய புத்தாண்டு-பொங்கல் நல்வாழ்த்துகள் !!!இவ்வாறு ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்


By வல்லம் தமிழ்
1/14/2011 10:37:00 PM
1/14/2011 10:37:00 PM


By பொன்மலை ராஜா
1/14/2011 9:59:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *1/14/2011 9:59:00 PM