வெள்ளி, 14 ஜனவரி, 2011

fisherman killed by Ilangai: மீனவர் சுட்டுக்கொலை: இலங்கைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா எதிர்ப்பு

அட முட்டாளே! கூண்டோடு அனைவரையும் அழித்து விட்டுக் கடலில் 
 
மாயம் எனச் செய்தியை வெளியிடச் செய்யாமல் இப்படியா தவணை 
 
முறையில் கொன்று பிறரைச் சான்றாக உயிருடன் விட்டு வைப்பீர்கள் 
 
 
என்று கண்டித்ததாகக் கேள்வி. 
 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா எதிர்ப்பு


புதுதில்லி, ஜன.13: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் தூதர் பிரசாத் காரியவாசத்தை நேரில் அழைத்து இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.எனினும் அந்த மீனவர் கொல்லப்பட்டதில் தங்கள் நாட்டு கடற்படைக்கு தொடர்பில்லை என இலங்கை தூதரகம் மறுத்துள்ளது. இதுகுறித்து இலங்கைத் தூதர் காரியவாசம் கூறுகையில், இலங்கை கடற்படைக்கு இதில் தொடர்பில்லை என்றாலும், இந்தியா அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளதால் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கைக்குள் நுழைந்தாலும் மீனவர்கள் மீது ஒருபோதும் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என இலங்கை கடற்படைக்கு கடுமையான உத்தரவுகள் போடப்படிருப்பதாகவும் அவர் கூறினார்.இதனிடையே இந்த சம்பவம் குறித்து கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரிடம் இருந்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்,எம்.கிருஷ்ணா கோரியுள்ளார்.
கருத்துகள்


இலங்கை கடற் படையினரின் இந்த செயல் நமது மத்திய, மாநில அரசுகளால் முழுமையாக கண்டிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் தமிழ் நாடு அளவு கூட இல்லாத இலங்கைக்கும் இந்தியா அடிமைப்பட வேண்டும். நவாஸ்
By mohamed nawaz
1/13/2011 9:35:00 PM
சோனியாவும் கருணாவும் கொன்ற லட்ச கணக்கான இலங்கை தமிழர்களுக்காக எங்கே போயி யாரிடம் கேள்வி கேட்பது ? யாரிடம் முறை இடுவது ?
By பன்னாடை பாண்டியன்
1/13/2011 9:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக