நாங்கள் என்றைக்குமே தமிழக மீனவர்களையோ ஈழத்தமிழர்களையோ கொன்றொதே இல்லை. அவர்களை மதித்துப்போற்றி அவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் சிவலோகப் பதவி அல்லது வைகுண்டப் பதவி அல்லது மேலுலகப் பதவி கிடைக்கப் பெருந்தன்மையுடன் வழி வகுக்கின்றோம். அதைப் போற்ற மனம் இல்லாவிட்டாலும் தூற்றாமலாவது இருக்கலாமே! - அடுத்து இப்படி ஓர் அறிக்கை வந்தாலும் வரலாம்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, ஜன.13: தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுவதை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் இன்று தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.எனினும் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாகத் தகவல் இல்லை என இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கேப்டன் அதுல சீனார்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருத்துகள்
இதுவரை இலங்கை படையால் ஒரு அப்பாவிகூட கொள்ளப்படவில்லை என்பதை ராஜபக்ச பலதடவை கூறிவிட்டார். இதை சோனியா, தி மு.க அரசு இரண்டும் ஏற்று இருக்கும் நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என அப்பாவியாக தமிழர்கள் இருப்பதுதான் தவறு. தேர்தலில் பாடம் புகட்ட ஜனநாயகம் வழிவிடுகின்றது. சிந்திப்போம்.
By kannan
1/13/2011 9:14:00 PM
1/13/2011 9:14:00 PM
ஒரு போர்வீரன் கொலை செய்யப்பட்டதிற்காக போர்தொடுத்த இஸ்ரேல் என் கண் முன்னாள் தெரிகிறது. அதே வேளையில் தமிழக மீனவர்களை காக்கை குருவிகளை போல சுட்டு தள்ளும் சிங்கள ராணுவத்தினர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுக்கும் இந்தியாவும் என் கண் முன்னாள் தெரிகிறது.எங்கோ நெருடல் தெரிகிறது. தமிழனத்தை இந்திய ஆட்சியாளர்கள் எவ்வாறு புறக்கணிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தபோதிலும் கடிதம் எழுதிகொண்டிருக்கும் தமிழக தன்மான தலைவர்களும் தெரிகிறார்கள். வாழ்க சுயமரியாத சுடர்கள்.
By தமிழன்.K
1/13/2011 7:59:00 PM
1/13/2011 7:59:00 PM
இந்தியா இப்படியே வருத்தத்தையும், வேதனையையும் தெரிவித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். இவற்றையெல்லாம் இலங்கை அரசாங்கமோ அல்லது படையினரோ ஒரு பொருட்டாகவே மதிக்கப்போவதில்லை. பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவின் படத்தை போட்டு இந்திய இராணுவத்தினரின் பிள்ளைகள் படிக்கும் உடுமலைப் பேட்டை பள்ளி ஒன்றுக்கு காலண்டர்களை வழங்கும் அளவுக்கு ராஜபக்சவை இந்திய இராணுவம் தூக்கிபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை கடற்படையினர் அடங்கிப்போவார்கள் என எதிர்பார்ப்பதோ அல்லது இப்போதைய இந்திய அரசின் தலைமை பீடத்தில் இருப்பவர்கள் சொல்வதை கேட்பார்கள் என்று நினைப்பதோ கனவில்தான் நடக்கும் என்று குமுறுகிறார்கள் தமிழக மீனவர்கள்!. web dunia
By ramiyer
1/13/2011 7:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
1/13/2011 7:22:00 PM