செவ்வாய், 11 ஜனவரி, 2011

discrimination of kerala police at sabarimalai: சபரிமலையில் தமிழக இறையன்பர்களிடம் பாகுபாடு காட்டும் கேரளக் காவல்துறையினர்

இத்தகைய பாகுபாடு இன்று நேற்றல்ல; என்றைக்கும் தொடர்வதுதான். இருப்பினும் வெட்கம்   கெட்டுப்போய் இறையன்பர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனரே! பாகுபாடு காட்டுவோரைத் திருத்தாத ஐயப்பனிடம் செல்வதைவிடத் தமிழ்க்கடவுள் முருகனை நாடலாமே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


சபரிமலையில் தமிழக பக்தர்களிடம் பாரபட்சம் காட்டும் 
கேரளப் போலீஸôர்

First Published : 11 Jan 2011 03:05:02 AM IST


சபரிமலை,ஜன.10: சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸôர், தங்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக தமிழகப் பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.  சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில தினங்களில் பக்தர்கள் சுமார் 13 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்யும் நிலையுள்ளது.  இதில் பம்பையில் இருந்து வரும்போது பக்தர்களை தடுத்து நிறுத்தி குழுக்கள், குழுக்களாக அனுப்புகின்றனர். ஐயப்பன் கோயிலுக்கு வருகை தருவதில் சுமார் 60 சதவீதம் பக்தர்கள் தமிழர்கள். ""பம்பையில் இருந்து வரும்போது மரக்கூட்டம் பகுதியில் போலீஸôர் தடுத்து நிறுத்துகின்றனர். கேரள பக்தர்கள் என்றால் அவர்களிடம் கனிவாகப் பேசுகிறார்கள். தமிழகப் பக்தர்களை பிடித்து கீழே தள்ளிவிடுகின்றனர்.  அதேபோல, சரங்குத்தி பகுதியில் தண்ணீர் குடிக்க வரிசையை விட்டு வெளியே வந்தால் லத்தியால் அடிப்பது போன்ற செயல்களில் கேரள போலீஸôர் ஈடுபடுகின்றனர் என்கின்றனர் தமிழகப் பக்தர்கள்.  சிறப்பு அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக