வெள்ளி, 14 ஜனவரி, 2011

singhala def.sec.visit to america: இலங்கை பாதுகாப்புச் செயலர் அமெரிக்காவுக்கு இரகசிய பயணம்?

ஈராக்கில் விண்கலனில்  இருந்து குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களைச் சுட்டுக்கொண்டே படம் எடுத்த அமெரிக்க அரசே! உலக நாடுகளின் உயிர்ப்பலிகளுக்குக்காரணமான அமெரிக்க அரசே! உன்   வழியில் உன் துணையுடன்தானே நாங்களும் உன் வழியைப்  பின்பற்றினோம். உங்கள் மக்கள் ஏன், பிறருடன் சேர்ந்து எங்களை எதிர்க்கிறார்கள்? என்று கேட்பதற்காகச் சென்றுள்ளார் என அறிய வருகிறோம்.  இருப்பினும் விரைவில் சிங்களத்தலைவர்களுக்கும் படைத்தளபதிகளுக்கும் சாவு மணி அடிக்கப் போவது உறுதி என்பது ஆண்டவன் கட்டளை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பப் போவதாவும்  செய்தி வந்துள்ளது. 
அன்புடன் இலக்குவனார் திருவள் ளுவன்


இலங்கை பாதுகாப்புச் செயலர் அமெரிக்காவுக்கு ரகசிய பயணம்?

First Published : 13 Jan 2011 03:21:14 PM IST


கொழும்பு, ஜன.13:  இஸ்ரேல் சென்றிருந்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச, அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக இலங்கை இணையதளங்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்பு செயலரின் அமெரிக்க பயணத்தை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் ரகசியமாக வைத்துள்ளதாகவும்சமீபத்தில் லண்டனில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு ஏற்பட்ட நிலைமை பாதுகாப்புத் துறைச் செயலருக்கும் ஏற்படலாம் என்பதால் இந்த பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக