வெள்ளி, 14 ஜனவரி, 2011

அரசு மருத்துவமனைக்கு இராசீவ் பெயர்: கருணாநிதிக்குத் தங்கபாலு பாராட்டு

சரி!சரி! பாராட்டினால் போதுமா? உடனே கோவன்மீது நடவடிக்கை எடுத்துக்  கூடுதல்தொகுதிகளோ பதவிகளோ கேட்காமல் கூட்டணியை உறுதி செய்யுங்கள்.  எங்களைப் போன்ற அடிமைகள் வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள் என்பதை உணரச் செய்யுங்கள். தமிழ்நாடே! நீ என்றைக்குத்  தமிழர் நாடாக மாறப் போகிறாய்? 
ஏக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அரசு மருத்துவமனைக்கு ராஜிவ் பெயர்: கருணாநிதிக்கு தங்கபாலு பாராட்டு

First Published : 13 Jan 2011 02:36:55 PM IST


சென்னை, ஜன.13:  சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளதற்கு முதல்வர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ்காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்தார்.அதற்கு பதிலளிக்கும்வகையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ் பெயர் விரைவில் சூட்டப்படும் என கருணாநிதி அறிவித்தார். மிகப்பொருத்தமும், சிறப்புக்கும் உரிய அந்த அறிவிப்புக்காக முதல்வருக்கு காங்கிரஸ் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக தங்கபாலு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள்


பொது கழிப்பிடத்திற்கு வேண்டுமானால் ராஜீவ் காந்தி பொது கழிப்பிடம் என்று பெயரை சூட்டுங்கள்.. வட நாட்டில் எதனை கட்டடங்களுக்கு தமிழர்களின் பெயர் சூட்ட பட்டுள்ளது? ராஜீவ் பெயரை சூட்டினால் 2G spectrum ஊழலில் அடித்த பணம் மீண்டும் நாட்டுக்கு வந்து விடுமா? போபர்ஸ் ஊழல் வழக்குக்கு தீர்ப்பு வந்திடுமா? தமிழக மக்கள் வரிபனத்தில் கட்டப்பட்டு இயங்கும் பொது மருத்துவமனைக்கு ஒரு தமிழின எதிரியின் பெயர் சூட்டுவதை பார்த்து கொண்டிருக்கும் தமிழர்கள் சொரணை என்னவானது? காமராஜரை தவிர வேறு எந்த காங்கிரஸ் காரனையும் தமிழர்கள் மதிக்க வேண்டியதில்லை, தமிழின எதிரி காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து வேரறுப்போம்.
By tamilan
1/13/2011 11:07:00 PM
Karuna, the king of all scams, now honoring Himalayan bofors scam. What is the necessity of naming a government hospital after Rajiv Gandhi? What was his achievement? Moreover, he is an alien. Are there any dearth of Tamil Heroes? How about honoring language martyrs of 1965? He is pawning our nation at the feet of hindikarans to stay in power. Wake-up Tamils!. Throw people like Karuna, Jaya and their sycophants out of our nation.
By Raja
1/13/2011 11:00:00 PM
நம் தலை விதி இதை எல்லாம் கேட்க வேண்டும் என்று.
By Sri
1/13/2011 10:07:00 PM
வெட்கம் கெட்டவர்கள்.....தன்மானம் அற்றவர்கள்...சுயலாபத்துக்காக போற்றி துதிபாடுபவர்கள்....பிஸ்கட் போட்டால் வாலை ஆட்டும் பிராணிகள்.....நாளை அணி மாரிடின் குறைக்கவும் செய்வார்கள்....என்ன பிறவிகள் இவர்கள்?....
By raghu
1/13/2011 9:59:00 PM
அப்படியே , சென்னையில் உள்ள சமாதிக்கு "ராஜபக்சே' பெயர் சுட்டலாம். ராஜீவ் ஜி.எச். இக்கு என்ன செய்தார்?
By கரிகாலன்
1/13/2011 8:59:00 PM
கருணாநிதிக்கு வேறு வழி இல்லை.எல்லாம் ஸ்பெக்ட்ரம் படுத்தும் பாடு.இனி அவர் வீட்டுக்கே சோனியா பெயரை வைப்பார்.இருபது வருடம் கழித்து இப்பொழுது தான் ராஜீவ் பெயர் கருனானரிக்கு ஞாபகம் வந்திருக்கு.
By bparani
1/13/2011 7:20:00 PM

பீட்டர் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதில் வீரமணியை மிஞ்சிவிடுவார். அவருக்கு அங்கே என்ன காரியம் ஆகவேண்டி உள்ளதோ? இந்த கோரிக்கையை வைத்ததே இளங்கோவன் தான். ஏதோ பீட்டர் சொன்னதைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வாசன் திமுகவிற்கு எதிராக திரும்பினால் பீட்டரை வைத்து காங்கிரசை உடைக்கவழக்கம் போல ஒரு திட்டத்தை முக வைத்துள்ளார். காங்கிரஸ் கழற்றி விடுமோ என்ற பயம் முகவை ஆட்டுவிக்கிறது.
By ராசா
1/13/2011 6:30:00 PM
முதல்வரும் தங்கபாலுவும் இந்த பொழப்புக்கு ...
By shiva
1/13/2011 5:45:00 PM
அடுத்து கோபாலபுரம் வீட்டிற்கு சோனியாவின் பெயரும்.. சி.ஐ.டி காலனி வீட்டிற்கு ராகுலின் பெயரும் சூட்டப்படும் . தங்கபாலு பாராட்டு விழா எடுக்க வேண்டும்
By tamizhinian
1/13/2011 5:04:00 PM
By naming Rajiv Gandhi, will the prices of Onion and other vegetables will come down to Re.1-00 per kilo or life of Fisherman come alive? In the Parliament or Assembly, important issues are derailed and discussing thanks, names change and immediately thanks by Thanga balu. Peter Alphonse, Gnanasekaran, Social worker Yashodha who got a TNHB facility, are true politicians. Electorate of tamilnadu should appreciate their taking part in the assembly and solved many problems of tamilnadu public, hence, give them this time a big bang similar to gave Thangabalu. Congress should be routed out in tamilnadu, should ensure that they should never get deposit even in panchayat elections.
By V Gopalan
1/13/2011 4:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக