செவ்வாய், 11 ஜனவரி, 2011

seeman met vaiko: வைகோவுடன் சீமான் சந்திப்பு

இன்றைய சூழலில்  தமிழினப் படுகொலை  புரியும் காங்கிரசு தி.மு.க.வை விட்டு விலகுவது என்பது ஐயப்பாடே. எனவே,
தன்துணை இன்றால் பகைஇரண்டால் தானொருவன் 
இன்துணையாக் கொள்கஅவற்றின் ஒன்று 
என்னும் தெய்வப்புலவர் வாக்கிற்கு இணங்கப் பகைவரில் ஒருவரைத்  துணையாகக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.  
நட்டார்க்கு நல்ல செயலின்  விரைந்ததே 
ஒட்டாரை ஒட்டிக் கொளல் 
என்றும் தெய்வப்புலவர் நண்பருக்கு நல்லதைச் செய்வதை விடப் பகைவரைச் சேர்த்துக் கொள்வதை விரைந்து செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளார்.  பெரிய தீமையுடன் பெரிய கட்சி சேர்ந்துள்ளதால்  சிறிய தீமையுடைய அடுத்தகட்சியுடன் சிறிய கட்சிகள் சேருகின்றன. இவையெலலாம் இயற்கையே! எக்கட்சியினராக இருப்பினும் தமிழுக்கும் தமிழர்க்கும்  தூய்மைக்கும் முதன்மை அளிபப்வர்க்கே வாக்களிப்போம்! அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
வைகோவுடன் சீமான் சந்திப்பு

First Published : 10 Jan 2011 05:55:21 PM IST


சென்னை, ஜன.10- மதிமுக பொதுச்செயலர் வைகோவை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று சந்தித்துப் பேசினார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்துக்கு இன்று காலை 11 மணியளவில் சீமான் வந்தார். வைகோவுடன் அவர் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்."நான் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முதன்முதலில் வைகோ அறி்க்கை வெளியிட்டார். அவரது ஆதரவுக்கு நான் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன்." என்று சீமான் கூறினார்."வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக சீமானும் திரையுலகைச் சேர்ந்த தமிழின ஆதரவாளர்களும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்." என்று வைகோ தெரிவித்தார்.
கருத்துகள்

Vaiko, first you should have guts to ditch Jaya. Both Jaya and Karuna are two evil forces that should be defeated. Congress is an alien autocratic force that should be kept out of our peace loving nation. Seeman, please be aware. Do not get too emotional, learn from the past mistakes. Unite all like-minded forces and form a grand Tamil National Alliance to defeat the evil forces.
By Raja
1/10/2011 11:03:00 PM
ஜெ. இன்னும் காங்கிரஸுக்காக காத்திருக்கிறார். ஜெ-வின் கூட்டாளி வைகோ போன்றோருடன் பேசுவதை விடுத்து, சீமான் வரும் தேர்தலில் நாம்தமிழர் வெல்ல வகை செய்யவேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் தமிழைத் தாய் மொழியாகக்கொண்ட வேட்பாளர்களையே வெற்றி பெற வைக்கவேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞரைத் தமிழினத்தின் எதிரியாக்குவோரே உண்மையான தமிழரின் எதிரிகள். இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு வாய்சவடால் பேர்வழிகளின் பேச்சை நம்பிவிடவேண்டாம்.
By நாடோடி
1/10/2011 10:59:00 PM
seeman அன்ன நாம் வெல்வோம் உண்மையான தமிழர்கள் பின் வருவர் வாழ்க தமிழ்
By சி.க.balaguru
1/10/2011 10:38:00 PM
அப்பாடா ஒரு முடிவை எடுத்து விட்டார் சீமான் .இனி ஜெயா அவர்கள் சீமானின் துணையோடு .தேர்தலில் வென்று முதல்வர் ஆனதும் .இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி .ராசபக்செயை அடித்து .தனி ஈழம் .வாங்கி கொடுப்பார் .அங்கெ இனி செந்தமிழன் சீமான் .ஈழநாட்டு அதிபராகிவிடுவார் .ஏனென்றால் .புலிகளின் தலைவர் பிரபாகரன் .அவர்களை ஜெயா விற்கு பிடிக்காது .அவரை பிடித்துவந்து .இந்தியாவில் தூக்கில் .போட்டுவிடுவார் .ஜெயா.அப்படி ஆகிவிட்டால் வேறு யார் ஈழநாட்டின் அதிபராவது .சீமான்தான் ஆகவேண்டும் ..விரைவில் காயடிக்கப்பட்ட காளை மாடாகப்போகும் சீமானுக்கு அனுதாபங்கள்
By சே.ரே.பட்டணம்.மணி
1/10/2011 10:30:00 PM
அதிமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் சீமான் என்ன செய்வார். கம்யூனிஸ்ட் என்ன செய்யும் . யோசிச்சு வைங்கப்பா.
By மு.maanick
1/10/2011 10:01:00 PM
ஓகே sekar
By rajendr
1/10/2011 9:53:00 PM
வைகோவும் சீமானும் தமிழ் நாட்டை இலங்கையை போல் சுடுகாடாக மாற்றாமல் இருந்தால் சரி. இவர்கள் இருவரும் ஜனநாயகத்துக்கு இலாயக்கற்றவர்கள். ராஜாக்கள் ஆண்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டியவர்கள்.
By கே. ராஜன்
1/10/2011 9:51:00 PM
if any one vote for d m k or congress he\she will not belong tamil family we should not forget sri lanka tamils
By rajendr
1/10/2011 9:47:00 PM
நாம் தமிழர் இயக்கம் ஒரே ஒரு கருத்துடன் களம் காணவேண்டும் .தமிழ் இனம் காக்க வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையுடன் எல்லா தொஹுதிஹளுக்கும் நம் இயக்க உருப்பினர்ஹளை நிறுத்த வேண்டும் நாம் வெற்றி பெற்று உலஹம் முழுதும் உள்ள தமிழர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்
By சுப்பிரமணி
1/10/2011 9:45:00 PM
ஸ்பெக்டரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழல் மேல் ஊழல் செய்யும் காங்கிரஸே உனக்கு என்ன யோகிதை இருக்கிறது தமிழர்களை பற்றி பேசுவதற்கு...
By தமிழ்மகன்
1/10/2011 9:42:00 PM
சீமானின் உணர்சிகரமான பேச்சு கேட்க காத்திருக்குறோம். உண்மையான பேச்சு பேசும் அந்த மனிதன் வெல்வான். சீமான் வாழ்க!
By ஜக்குராஜ்
1/10/2011 9:37:00 PM
விடுதலைபுலிகளின் அழிவுக்கு காரணமானவர்களை எதிர்க்கும் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.ஆனால் அதிமுகவையும் இதே காரணத்திற்கு எதிர்ப்பதே நியாயம்.அப்படி எதிர்க்கவில்லை என்றால் அது சந்தர்ப்பவாதம்
By தில்லைவில்லாளன்.
1/10/2011 8:35:00 PM
இன உணர்வாளர்களின் கூட்டணி வெல்லட்டும் ! காங்கிரஸ் + தி மு க கூட்டணியை வேரறுப்போம் !!
By ஸ்டாலின்
1/10/2011 8:31:00 PM
வரும் electionoda இவர்கள் கானபோயவிடுவர்கள்
By sukkoor
1/10/2011 8:27:00 PM
தமிழா தமிழா நாளை நம் நாளே - இது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழன் தன் சகோதரன் ஈழ தமிழனுக்கு சொல்கிறேன். வாழ்க தமிழ் ! வளர்க தமிழன் ! காங்கிரஸ் ஒழிக ..................
By வெங்கடேஷ்
1/10/2011 8:12:00 PM
சீமானுக்கு வாழ்த்துக்கள்
By செந்தில்
1/10/2011 8:02:00 PM
தமிழன் என்றாலே ஏளனமாக பார்க்கும் காங்கிரஸ் தலைமை, அதற்க்கு துணை போகும் திமுக தலைமையை தமிழகத்தில் இருந்து துடைத்து எடுக்க வேண்டும். வாழ்த்துக்கள் சீமான்.
By சொரூபன்
1/10/2011 7:51:00 PM
ஈழ தமிழர்களை அழித்தவர்களுக்கும் அதற்கு துணைபோனவர்கலுக்கும் சரியான சவுக்கடி கொடுக்கவேண்டும் .உங்கள் முயற்சி வெல்லட்டும் வாழ்த்துக்கள்
By சேகர்
1/10/2011 7:42:00 PM
In the coming Tamil Nadu Election, all People must give a clear mandate against congress and its alliance.
By George Mathew
1/10/2011 7:39:00 PM
அருமையான கூட்டணி
By vignesh
1/10/2011 7:25:00 PM
மிக நல்ல கூட்டணி. வாழ்த்துக்கள்.
By Anandan
1/10/2011 7:06:00 PM
நிச்சயம் காங்கிரசுக்கு பேரடி காத்திருக்கிறது.
By vivek
1/10/2011 6:54:00 PM
நல்லது நடக்க வேண்டும் .
By அமைதிசூரியன்
1/10/2011 6:38:00 PM
good
By gk
1/10/2011 6:05:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக