சென்னை, மார்ச் 26:""பென்னாகரம் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் போதுமான அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிடம் திமுக மனு அளித்துள்ளது.இதுகுறித்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை திமுக கட்சிக் கொறடா டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நவீன் சாவ்லாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவின் விவரம்:""பதற்றமான வாக்குச் சாவடிகள் எவை என்பது குறித்த பட்டியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் மற்றும் திமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் தனித் தனியாக அளித்துள்ளனர். அதன்படி, 250 வாக்குச் சாவடிகளில் 62 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் பென்னாகரம் தொகுதியில் தேர்தல் நடைபெற்றபோது இந்து மதத்தைச் சேர்ந்த உயர் ஜாதியினர் தலித் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர்.எனவே, பதற்றமான வாக்குச் சாவடிகள் என தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்திலும் போதுமான அளவுக்கு போலீஸôரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.பென்னாகரம் தொகுதியில் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உடனடியாக இந்தப் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளனர்.
கருத்துக்கள்
ஆளும்கட்சியும் தோழமைக் கட்சியுமே இவ்வாறு கூறுவது அரசின் கையாலாகாதத் தன்மையை வெளிப்படுத்துவதாகப் பழி ஏற்படும். அல்லது வன்முறையைத் தூண்டிவிட்டு அடுத்தவர் மேல் பழி போடத் திட்டமிட்டுள்ளதாகத் தவறான எண்ணத்தை விளைவிக்கும். எப்படி இருந்தாலும் ஆளும் கட்சிக்கும் அரசிற்கும் இச் செயல் இழுக்கையே தேடித் தரும்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
3/27/2010 2:39:00 AM