வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துகள். சென்னை உயர்நீதி மன்றத்திலும் தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும். குற்றஞ் சாட்டப்பட்டவருக்குத் தன்னைப பற்றி வழக்குரைஞர் என்ன வாதத்தை எடுத்துரைக்கிறார் எனத் தெரிய இது பெரிதும உதவும். வழக்குகள் விரைவில் முடியவும் இது துணை புரியும். செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக எல்லா நிலைகளிலும் தமிழ் நிலைக்கச் செய்வது ஒன்றே மாநாட்டின் வெற்றியாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழில் வக்கீல்கள் வாதம்
மார்ச் 25,2010,00:00 IST
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று நடந்த வழக்கு விசாரணைகளின் போது வக்கீல்கள் தமிழில் வாதாடினர். ஐகோர்ட்டில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும், தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம், மதுரை ஐகோர்ட் கிளையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வக்கீல்கள் துவக்கினர். பிறகு தமிழில் வாதாடுவது உட்பட ஓரிரு கோரிக்கைகளை ஏற்பதாக, பதிவாளர்கள் உதயன், சேஷசாயி தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. தமிழில் வாதாட அனுமதிக்கப்பட்டதற்கு, வக்கீல்கள் நேற்று ஐகோர்ட் கிளையில் இனிப்பு வழங்கி, நன்றி தெரிவித்தனர். பெரும்பாலான வழக்குகளில், வக்கீல்கள் தமிழில் வாதங்களை எடுத்து வைத்தனர். நீதிபதிகளும் வாதங்களை பதிவு செய்தனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக