ஞாயிறு, 21 மார்ச், 2010

பணத்தை நம்பி தேர்தலை சந்திக்கிறது திமுக: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு



தருமபுரி, மார்ச். 20: சாதனைகளை சொல்லி தேர்தலில் வாக்கு கேட்காமல், பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கும் தரம் தாழ்ந்த அரசியல் நிலையை திமுக உருவாக்கியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.பென்னாகரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஆர். அன்பழகனுக்கு ஆதரவு திரட்டி பென்னாகரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:மக்களுக்காக செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டால் திமுக தோல்வி அடையும் என்பதால், பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்குகின்றனர்.பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற அச்சத்தால், பிரசாரத்திற்கு திமுக தலைவர் மு. கருணாநிதி நேரில் வருகிறார்.சோதனைச் சாவடிகளில் போலீஸôர் நடத்தும் வாகனச் சோதனையில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சி நிர்வாகிகளுக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதனால் ஆளும் கட்சி அமைச்சர்கள் தொகுதிக்குள் எளிதாக பணத்தை கொண்டு வருகிறார்கள்.பென்னாகரத்தில் தொழில் வளம், குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. இதற்கு திமுக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது என்றார்.அரூர் எம்எல்ஏ பி. தில்லிபாபு, மாநிலக் குழு உறுப்பினர் என்.குணசேகர், வட்டச் செயலர் பி.எம். முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, கே. குப்புசாமி, பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்

தமிழினப் படுகொலை, தமிழுரிமை யிழத்தல் முதலான தமிழ் சார்பான நேர்வுகள் நீங்கலாகத் திமுக வின் சாதனைகள் சிறப்பாகவே உள்ளன. ஆனால் சாதனையின் அடிப்படையில் வாக்களிக்கும் நிலையில் மக்கள் இல்லை. யார் ஆண்டால் என்ன? இப்போதைக்கு ஆதாயம் தருபவரிடம் நன்றிகாட்டுவோம் என்ற மனப் போக்கே நிலவுகிறது. சங்கராச்சாரியார் படத்தின் மீது ஆணையிட்டு வாக்களிப்பு உறுதி கேட்ட மார்க்சியத்திற்கு அது சரியெனப்பட்டது போல் ஆளுங்கட்சிக்கு இது சரியெனப் படுகிறது. எனவே, கட்சி சார்பற்ற மக்கள் ஒருங்கிணைந்து அரசியலில் நேர்மையும் தூய்மையும் நிலவும் சூழலை உருவாக்க வேண்டும். வாப்பில்லாமையால் மிகுதியான ஊழல் செய்ய முடியாது போன கட்சிவாதிகள் இது குறித்து ஒன்றும் பேசக் கூடாது. வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இப்பொழுதே அரசியல் தூய்மை இயக்கத்தைத் தொடங்கினால் நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/21/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக