தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நலமுடன் உள்ளார் என்பது உண்மை. ஆனால், இதனைச் செய்தியாக வெளியிடுவதால் இது வேறு யார் வேலையோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது. எனினும் நாம் தமிழர் இயக்கத் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்கள் வழியில் மாலைமுரசு இயங்குகிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் செய்தி வரிகள் அமைந்ததற்குப் பாராட்டுகள். அதே நேரம் கருங்காலிகள் சிலர் பொய்யான பெயரி்ல் மனித நேயத்திற்கும் தமிழ் நேயத்திற்கும் முரணாகப் பதிவுகளை மேற்கொண்டுள்ளதை நாம் புறந் தள்ளுவோம். வெல்க தமிழ் ஈழம்! வளர்க உலக-ஈழ நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மன்னிக்கவும் . மாலைமலர் எனக் குறிப்பிட வேண்டிய நான் தவறாகக் குறித்து விட்டேன். மாலை மலருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மன்னிக்கவும் . மாலைமலர் எனக் குறிப்பிட வேண்டிய நான் தவறாகக் குறித்து விட்டேன். மாலை மலருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, மார்ச். 22-
இலங்கையில் தனி ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடி வந்த விடுதலைப்புலிகளுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பின்னடைவு ஏற்பட்டது. சிங்கள ராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீசி ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
மே மாதம் 18-ந்தேதி நடந்த சண்டையில் பிரபாகரனை கொன்று விட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. பிரபாகரன் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரது உடலையும் சிங்கள வீரர்கள் முள்ளி வாய்க்காலில் இருந்து எடுத்து வந்து காண்பித்தனர்.
விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து காட்டிக் கொடுக்கும் வேலை செய்த கருணாவும், அந்த உடலை பார்த்து விட்டு, “அது பிரபாகரன் உடல்தான்” என்றார். ஆனால் கடந்த ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், தேசியத் தலைவர் பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். உரிய நேரத்தில் அவர் வெளியில் வருவார் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவுத்தலைவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது தொடக்கம் முதலே உறுதியாக தெரிய வந்தது. சிங்கள ராணுவ உயர் அதிகாரிகளும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கலாம் என்று கூறினார்கள். பிரபாகரனுக்கு மரணச் சான்றிதழ் ஒன்றை தற்காலிகமாக தயாரித்துக் கொடுத்த சிங்கள அதிகாரிகளால், பொட்டு அம்மான் விஷயத்தில் அப்படி ஒரு தற்காலிக சான்றிதழைக் கூட கொடுக்க இயலவில்லை.
இந்திய உளவு அமைப்பான ராவும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். என்று கருதுகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச போலீஸ், பொட்டு அம்மானை தேடி வருவதாக இணையதளத்தில் அறிவித்துள்ளது.
விடுதலைப்புலி தலைவர்கள் அனைவரையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள அரசுக்கு சர்வதேச போலீசின் அறிவிப்பு தலைவலியைக் கொடுத்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள அவர்கள் பொட்டு அம்மான் போரின் கடைசி நாட்களில் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு தகவலை பரப்பி வருகிறது.
ஆனால் இது சிங்கள உயர் அதிகாரிகள் நடத்தும் நாடகம் என்று உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர்களுக்கு புரிந்தது. வழக்கம்போல சிங்கள அதிகாரிகள் தமிழர்கள் மனதை திசை திருப்புவதற்காக நடத்தும் ஒரு உளவியல் யுத்தம் என்பதை புரிந்து கொண்டனர். பொட்டு அம்மான் விஷயத்தில் தாங்கள் பரப்பிய தகவல் எடுபடாமல் போய் விட்டதே என்ற ஆதங்கம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிங்கள அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை விடுதலைப்புலி தலைவர்கள் கொடுத்துள்ளனர் நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரனும், பொட்டு அம்மானும் கடிதம் எழுதி உலகம் முழுக்க வாழும் தங்கள் ஆதரவாளர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
அத்தகைய ஒரு கடிதம் தமிழக அரசியல் தலைவர் உள்பட 5 பேருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் தளபதிகள் உயிருடன் இருப்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை தொடங்குவார்களா? களத்தில் எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையில் அதற்கு சாத்தியம் உள்ளதா? சிங்கள பேரினவாதத்தை ஆயுதப் போராட்டத்தால் வீழ்த்த எவ்வளவு நாட்கள் தேவைப்படும்? என்றெல்லாம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கும் வல்லமை விடுதலைப்புலிகளிடம் இருப்பதாக சர்வதேச போர் நிபுணர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். ஆனால் சொந்த நாட்டில் எல்லா உரிமையும் பெற்று வாழ கேட்கும் கோரிக்கையை தீவிரவாதம் என்று சிலர் முத்திரை குத்துவதை சாத்வீக முறையில் எதிர் கொள்ள விடுதலைப்புலிகள் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. உலக வரலாற்றில் சொந்த மண்ணில் வாழா விட்டாலும் நாடு கடந்த அரசை உருவாக்கி பல இனம் வெற்றி பெற்றிருப்பது போல, ஒரு முயற்சியை தற்போது விடுதலைப்புலிகள் முன் எடுத்துள்ளனர்.
அதாவது நாடு கடந்த ஈழ அரசை விடுதலைப்புலிகள் உருவாக்கி வருகிறார்கள். இதற்கான நடடிவக்கைகளில் விடுதலைப்புலிகளின் சர்வ தேச பிரிவு ஈடுபட்டுள்ளது.
நாடு கடந்த ஈழ அரசுக்காக வரும் மே மாதம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், இத்தாலி, நார்வே, தென்ஆப்பிரிக்கா, பெல்ஜியம், நியூசிலாந்து, சுவீடன், பின்லாந்து, மற்றும் அயர்லாந்து ஆகிய 16 நாடு
களில் இந்த வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
களில் இந்த வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
வாக்கெடுப்பு முடிந்த பிறகு 115 ஈழ பாராமன்ற உறுப்பினர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஈழத்தமிழர்களுக்காக உலகம் முழுக்க இந்த 115 எம்.பி.க்களும் சேவை செய்வார்கள்.
இதன் மூலம் தமிழ் ஈழ அரசு உலக அளவில் ஒரு தன்னாட்சி பெற்ற நாடு போல செயல்படும். மற்ற நாடுகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஈழ அரசு அமையும்.
Monday, March 22,2010 05:37 PM, மக்கள் said: ஆமா....நீ மட்டும் உயிருடன் இரு....அப்பாவி மக்களெல்லாம் சாகட்டும்....எண் இன்னும் எத்தனை பேரை கொள்ள நீ உயிருடன் இருக்கிறாய்..... |
Monday, March 22,2010 05:33 PM, ஆனந்த் said: ஆட்டோ முதுகில் ஒரு வாசகம் பார்த்தேன். " நண்பனுக்காக உயிரையும் தரலாம் ,அப்படிப்பட்ட நண்பன் இருந்தால் " என்று . இங்கு பின்னூட்டங்களை பார்க்கையில், இவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மலைக்க வைக்கிறது. தன் தாய்,தந்தை, தளபதிகள் உட்பட எல்லோரையும் சிங்கள ராணுவத்திடம் அடகு வைத்து விட்டு தான் மட்டும் தப்பியோடிய அந்த "சிரிப்பு போராளிகள்" அந்த நம்பிக்கைக்கு தகுதியானவர்கள் தானா என்பது தான் தெரியவில்லை. களத்திலிருந்து தப்பியோடிய யாரையும் சரித்திரம் பழிக்கும் . அடி வாங்கி தப்பியோடி தலைமறைவாக உள்ள இவர்களை கண்டு கன கம்பீரமாக வீர உலா வந்துகொண்டிருக்கும் ராஜபக்ஷே பயப்படவேண்டுமாம். அவருக்கு ஆப்பு நிச்சயமாம்..வாட் எ காமெடி ? வாட் எ காமெடி ? |
Monday, March 22,2010 05:25 PM, அந்நியன் said: இந்த செய்தி கண்டு அதிர்ச்சி அடைவார் திருமா ! இது மட்டும் நிஜமாக இருந்தால் பாவம் திருமா ! |
Monday, March 22,2010 05:18 PM, உண்மை தமிழன் said: ஏன்டா நீங்க திருந்தவ மாடீங்கள சீமானு ஒருத்தன் ஊற ஏமாத்தி அரசியல் பண்ணிட்டு இருக்கார் .... தமிழர்களே தயவு செய்து ஏமாறாதிர்கள் ... ஒன்று பட்ட இந்திய வை உருவாக்குவோம் |
Monday, March 22,2010 05:16 PM, samy said: meendu varuvar meendum varuvar vithaigai vilainthea theerum |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக