சென்னை, மார்ச் 26: பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு வைத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார்.மேலும், வாக்குப் பதிவின்போது வன்முறையைக் கட்டவிழ்க்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.பென்னாகரம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினருக்கு முதல்வரும், கூட்டணியின் தலைவருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:""பென்னாகரம் இடைத் தேர்தலில் வேறு எந்தக் கட்சிக்கும் ஏற்படாத காழ்ப்பும், வெறுப்பும் பாமக நிறுவனர் ராமதாஸýக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதிமுகவுக்குக் கூட ஏற்படாத அளவுக்கு அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.திமுகவைப் பற்றியும், குறிப்பாக என்னைப் பற்றியும் ஒருமையிலே பேசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.பென்னாகரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினேன். அதைத் தொடர்ந்து ராமதாஸ் ஆற்றியுள்ள வன்முறைக்கான தூண்டுகோல் உரையும், எல்லோருடைய கவனத்துக்கும் வந்திருக்கும்.திமுகதான் தன்னுடைய முதல் எதிரி எனவும், அதை ஒழிப்பதுதான் தன்னுடைய முக்கிய பணி என்றும் அவர் கூறியுள்ளார். அதற்காக, அதிமுகவுடன் ரகசியமாக கூட்டுச் சேர்ந்து பென்னாகரம் இடைத் தேர்தலை சந்திப்பார் என்பதற்கு ஆதாரம் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது.தொலைபேசியில் பேசினார்: இரண்டொரு வாரங்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசிய பேச்சுக்கும், அந்தப் பேச்சிலே இருந்த மென்மைக்கும், திடீரென்று தீப்பொறி கக்க அவர் பென்னாகரத்தில் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கும் } மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.அந்த ஆச்சரியத்தைப் போக்கியது அவருடைய கடந்த கால நடவடிக்கைகளும், அறிக்கைகளும், பேச்சுகளும் என்பதை அனைவரும் அறிவர்.அதிமுகவையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு இந்த இடைத் தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான போக்கு அந்த வட்டாரத்தில் உருவாகியுள்ளது. நான் மட்டுமல்ல } நாளேடுகளில் அவருடைய அறிக்கைகள், பேச்சுகளைப் படிப்பவர்களும் புரிந்து கொள்ள முடிகிறது.வன்முறைகளை கட்டவிழ்த்தாலும்: தேர்தலின் போது, அவர்கள் என்னதான் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டாலும், களப் பணியாற்றும் கட்சியினர், தோழமைக் கட்சியினர் அவைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.பதிலுக்குப் பதில் என்ற நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும், அன்போடும், அமைதி காக்கும் மனத்தெம்போடும் வாக்காளர்களைச் சந்திப்பதிலும்}வெற்றி ஒன்றில் மட்டுமே நாட்டம் கொண்டு அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக் கூடிய தீய சக்திகளுக்கு, தீவிரவாத சக்திகளுக்கு சற்றேனும் இடம் கொடுக்கக்கூடாது.கருமமே கண்ணாயினர் என்ற முதுமொழிக்கு ஏற்ப, பணியாற்றி ஜனநாயகத்தை அலுங்காமல், குலுங்காமல் காத்திட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/27/2010 2:29:00 AM
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/27/2010 2:28:00 AM
3/27/2010 2:19:00 AM
3/27/2010 12:35:00 AM