ஞாயிறு, 21 மார்ச், 2010

ழம் ஒளிரத் தன் உடலை எரியூ்ட்டிய வீரப் போராளி முத்துக்குமார் விழைந்த வண்ணம் அவரது உடலை ஆயுதமாக்க ஈழ உணர்வு அரசியல் தலைவர்களே எதிராக இருந்தமை வேதனை அளிக்கிறது. கட்சித் தலைவர்களை அப்புறப்படுத்தி விட்டு முடிவெடுததிருப்பின் மாணாக்கர் உலகம் சரியான முடிவெடுத்து மக்களிடையே கொழுந்து விடடெரிந்த ஈழ விடுதலை உணர்வை மேலும் வளர்த்திருக்கும். திருமா திமுக கூட்டணியின் காரணமாக இந்த முடிவை எடுத்தார் என்றால் வைகோவும் நெடுமாறனும் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள என்று தெரியவில்லை. எப்படியோ வீரப் போராளி முத்துக்குமாரின் ஈகத்தை வீணடித்து விட்டார்கள். இனியேனும் விழி்த் தெழுவார்களாக! ஊர்கள தோறும் ஒரே நாளில் நினைவு ஊர்வலம் நடத்தி அவரின் கனவு நனவாக ஈழம் விடுதலை அடைய உதவுவார்களாக! வெல்க தமிழ் ஈழம்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் ஈழக் குடியரசு அமைக! வீரப் போராளி முத்துக்குமார் புகழ் ஓங்குக!ஈழ உலக நட்புறவு ஓங்குக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக