சனி, 27 மார்ச், 2010

குழம்பிய குட்டையும்,​​ காங்கிரஸூம்...



நாம் உடனடியாக கவனித்தாக வேண்டிய முக்கியமான பிரச்னை நம் நாட்டு பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்தா.​ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவை எவை என்பதை முதலில் நாம் தெளிவாக அடையாளம் காண வேண்டும்.​ மாவோயிஸ்டுகளும் பிற தீவிரவாதிகளும் நம் நாட்டில் ஏற்படுத்திவரும் குழப்பங்களைத் தீர்க்க உத்திகள் வகுக்க வேண்டும்.​ மும்பையில் 2008 நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாகவும் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவரும் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் உளவாளியாக ஒரே நேரத்தில் செயல்பட்டவருமான டேவிட் ​ ஹெட்லியை விசாரணைக்காக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும் அமெரிக்கா முன்னுக்குப் பின் முரணாகவும் சுயநலப் போக்கிலும் நடந்து கொள்வது சற்றே குழப்பம் தருவதாக இருக்கிறது.​ ஆப்கானிஸ்தான் போர்க்களத்தில் தனக்குப் பதிலாக பாகிஸ்தானை முழுதாக இறக்கிவிட்டுவிட்டு தக்க சமயத்தில் வெளியேற அமெரிக்கா நினைத்திருப்பதால் பாகிஸ்தானுக்குச் சாதகமாக நடந்துகொள்ள விரும்புகிறது.​ எனவேதான் பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுகிறது என்று தோன்றுகிறது.​ ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்க்கும் போரை எதிர்காலத்தில் பாகிஸ்தான்தான் முழுப் பொறுப்பேற்று நடத்த வேண்டியிருக்கும்.​ இதற்காக அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷியுடன் அமெரிக்க அரசு பேசவிருக்கிறது.​ அந்தப் பேச்சில் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஏ.பி.​ கயானி,​​ ஐ.எஸ்.ஐ.​ என்று அழைக்கப்படும் உளவு அமைப்பின் தலைவர் லெப்.​ ஜெனரல் ஷுஜா பாஷா ஆகியோரும் பங்கேற்கவிருக்கின்றனர்.​ பாகிஸ்தானில் உண்மையில் அதிகாரம் பெற்றவர்கள் இவர்கள்தான்.​ நாம் இப்போதுதான் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.​ மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஓராண்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.​ பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று ஓயாமல் கிளிப்பிள்ளை போல சொல்லும் அமெரிக்கா,​​ தலிபான்களை எதிர்த்துப் போராடுவதற்காகப் பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நவீன ராணுவ சாதனங்களையும் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.வருகிறது.​ மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி திரும்ப பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கை எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று அமெரிக்கர்கள் இப்போது பகிரங்கமாகவே கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.​ ​​ டேவிட் ஹெட்லி அமெரிக்கக் குடிமகன்.​ அவர் மன்னிப்பு கோரி,​​ உண்மைகளைத் தெரிவிக்க முன்வருகிறார் என்பதற்காக மும்பையில் அவருடைய வழிகாட்டலில் நடந்த படுகொலைகளுக்கான தண்டனையைத் தராமல் எப்படி அவரைவிட்டுவிட முடியும்?​ அவரை இந்தியாவுக்கு மேல் விசாரணைக்காக அனுப்பிவைக்க வேண்டும்;​ பயங்கரவாதிகள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தால் அவர்களுக்கு மட்டும் தனிச்சட்டம் அமலாகுமா என்ன?​ ​​ பாகிஸ்தானை தாஜா செய்யும் அமெரிக்காவின் செயலை இந்திய அரசியல்வாதிகளும் மக்களும் ஏற்கமாட்டார்கள்.​ கடந்த காலங்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா அளித்த நவீன ஆயுதங்கள் எல்லாம் இந்தியாவுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட்டன.​ பராக் ஒபாமா சிறந்த பேச்சாளர்;​ பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர் நன்றாகப் பேசியதால்தான் உலக சமாதானத்துக்காக அவர் பாடுபடுவார் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.​ பயங்கரவாதத்துக்கு எதிராகப்போரிடுவேன் என்று இடைவிடாமல் அவர் பேசியதற்கும் பாகிஸ்தானுக்கு நவீன ராணுவ ஆயுதங்களை வழங்கியதற்கும் பொருத்தம் இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்.​ பாகிஸ்தானுடனான யுத்தங்களுக்குப் பிறகு நம்முடைய போர் வீரர்களால் கைப்பற்றப்பட்ட சாபர் ஜெட் போர் விமானங்களும் பேட்டன் டாங்குகளும் நமக்கு உணர்த்திய உண்மைகள் என்ன?​ அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்த எடுத்து வந்தது என்பதைத்தானே?மாவோயிஸ்டுகளால் விளைந்த நாச வேலைகளை நாம் நிறையப்பார்த்துவிட்டோம்.​ மாவோயிஸ்டுகளின் தாக்குதலை முறியடிப்பதில் மாநில அரசுகள் இப்போது முன்பைவிட வலுவாக உள்ளன.​ பழங்குடிகளின் நலனுக்காகத்தான் மாவோயிஸ்டுகள் இப்படி அரசு மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தவறாக எண்ணக்கூடாது;​ பழங்குடிகளின் கோரிக்கைகள் -​ பிரச்னைகள் வேறு,​​ மாவோயிஸ்டுகளின் நோக்கமே வேறு.​ மாவோயிஸ்டுகளின் கொள்கைகளையும் கோரிக்கைகளையும் எந்தச் சமூகமும் ஏற்காது.மாயாவதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தவறான காரணங்களுக்காகவே தொடர்ந்து செய்தி ஊடகங்களால் பேசப்படுகின்றனர்.​ ​ ​ ​தன்னுடைய பிறந்தநாள் ​பொதுக்கூட்டத்தைச் சீர்குலைக்க மேடைக்கு அருகில் இருந்த தேன் கூடு கலைக்கப்பட்டதாக போலீûஸ விட்டு வழக்கைப் பதிவுசெய்துவிட்டு,​​ முதுபெரும் சோஷலிஸ்ட் ராம் மனோகர் லோகியாவின் சிலைக்கு மாலையிட முடியாமல் முலாயம் சிங் தடுக்கப்பட்டார்.​ இத்தகைய அற்பச்செயல்களால் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குதான் அதிகரிக்கும்.​ தேர்தலில் மக்கள் அளிக்கும் அமோக ஆதரவு என்பது ஓர் அரசியல்தலைவரின் சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அல்ல;​ இதற்கு மாயாவதியும் விதிவிலக்காக இருக்க முடியாது என்று நினைவுபடுத்த விரும்புகிறேன்.​ தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் 2 மனைவியர்,​​ அவர்களுடைய பிள்ளைகள்,​​ அவர்களுடைய குடும்பச் சொந்தங்கள் இடையே சண்டை மூளப்போகிறது.​ நீண்ட காலத்துக்கு சண்டையை நிகழ்த்தும் "ஆற்றல்' சம்பந்தப்பட்ட அனைவரிடமும் இருக்கிறது.​ இதில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு ஏதும் இல்லை என்றாலும் பக்கத்திலிருந்து வேடிக்கை ..​​ இதை தன்னுடைய எதிர்காலத்துக்கு எப்படிச் சாதகமாகப் ​ பயன்படுத்திக் கொள்வது என்று சிந்திக்கவும் அதற்கு நிரம்ப அவகாசம் கிடைக்கும்.​ மாவோயிஸ்டுகள் தன்னலம் பாராத தியாகிகள்,​​ ஏழைகள்,​​ பழங்குடிகளின் நலன்களுக்காகத்தான் அவர்கள் ஆயுதம் எடுத்துப் போர் செய்கிறார்கள் என்று எழுதியும் பேசியும் வந்த ஊடகங்கள் இப்போது தங்களுடைய தவறை உணர்ந்து,​​ ஆதரவு அளிப்பதை நிறுத்தி வருகின்றன.​ மத்திய,​​ மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் இப்போது மாவோயிஸ்டுகளின் மறைவிடங்களை நோக்கி முன்னேறிச் செல்கின்றன.​ இதனால் ஏற்பட்டுள்ள விரக்தியில் இதுவரை இருந்திராத வகையில்,​​ எதிர்பாராத இடத்தில்,​​ எதிர்பாராத நேரத்தில் மூர்க்கத்தனமாக மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும்பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதைப் போல காட்டிக்கொண்டே,​​ இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் இரட்டை வேடத்தை பாகிஸ்தான் அற்புதமாகப் போடுகிறது.​ பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வலு கிடைக்காமல் போனதால் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையை அந்த நாட்டு ராணுவமும் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் தங்களுக்குச் சாதகமாகவே நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன.​ பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அவர்களுக்கு உள்ள உண்மையான அக்கறை எப்படிப்பட்டதென்று பாகிஸ்தானுடன் அமெரிக்கா நடத்தும் பேச்சுக்குப் பிறகுதான் ​ தெரியும்.​ உண்மை என்னவென்றால் இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்ட அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அங்கிருந்து வெளியேறியே தீர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.​ இவ்விரு நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் மனிதவெடிகுண்டு தாக்குதல்களும்,​ அதையொட்டி தங்கள் நாட்டில் மக்களிடம் பெருகிவரும் அதிருப்தியும் அவர்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கி ​.​ அமெரிக்காவும் பாகிஸ்தானும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையில் பேசவிருக்கின்றன.​ ஒபாமாவும் அவருடைய நெருங்கிய ஆலோசகர்களும் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்று இந்த பேச்சுக்குப் பிறகு தெரிந்துவிடும்.​ நியூயார்க்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை ஒரு கண்ணோட்டத்திலும் மும்பைத் தாக்குதலை வேறு கண்ணோட்டத்திலும் பார்ப்பது என்று அமெரிக்கா தீர்மானித்துவிட்டால் அது மிகவும் துரதிருஷ்டவசமானதுதான்.

திமுகவில் இப்போது அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் முற்றிவருகிறது.​ வாரிசு அரசியலால் களத்துக்கு வந்த இருவரில்,​​ யார் அடுத்த வாரிசு என்பதில் திட்டவட்டமான நிலைமை இல்லாததால் இந்தச் சண்டைகள் ஏற்படுகின்றன.​ கட்சியின் தலைவர் இவர்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிட்டதால் இத்தகைய சண்டைகளை அவரால் தடுக்க முடியவில்லையோ என்று தோன்றுகிறது.​
பாட்டாளி மக்கள் கட்சியை இனி எந்த அணியும் நம்பாது;​ அடுத்து எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதில் தேமுதிக இணைந்துவிடக்கூடும்.​ அதிமுக தலைவர் ஜெயலலிதா தன் பங்குக்கு எதையும் அதிகம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது.​ அரசியலில் நிரந்தரம் என்று எதுவுமே கிடையாது.​ எனவே திமுகவுக்குச் சாதகமாக இப்போது இருக்கும் அலை,​​ எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம்.​ திமுக நல்ல கூட்டணிக் கட்சிதான் -​ எப்போது என்றால் தாங்கள் விரும்பும் துறைகளைப் பெறும்போதும்,​​ பெரும்பான்மை வலு இல்லாவிட்டாலும் தனித்தே ஆட்சி நடத்த அனுமதிக்கப்படும்போதும்தான்.​ தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து தன்னை வலுப்படுத்திக் கொள்வதை திமுக சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்;​ ராகுல் காந்தி ஏதோ வருகிறார்,​​ போகிறார் -​ இளைஞர் காங்கிரûஸத்தான் வலுப்படுத்துகிறார் அதனால் என்ன என்று திமுக சும்மா இருந்துவிடாது;​ ராகுல் காந்தியின் செயலால் காங்கிரஸ் கட்சிக்கு வலு கூடிவிடாது என்று திமுக தலைமை குறைத்து மதிப்பிடாது.​
​​ கருணாநிதியின் காலத்திலேயே கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்த வாரிசை அடையாளம் கண்டுவிட வேண்டும் என்ற கட்சிக்குள் தீவிர நடவடிக்கைகள் தொடங்கலாம்.​ மு.க.​ ஸ்டாலின்தான் கருணாநிதியின் அரசியல் வாரிசு என்று திட்டவட்டமாகத் தெரியவந்தால் கொந்தளிப்பு ஏற்படலாம்.​ அது திமுக குடும்பத்திலும் தோழமைக் கட்சிகளிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.​ குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கக் காங்கிரஸ் தயாராகிக் கொண்டு வருகிறது என்றுகூட நம்ப இடமிருக்கிறது.விஷம் போல ஏறிவரும் விலைவாசிதான் சாமானிய மக்களுக்கு முக்கிய பிரச்னை.​ அரிசி,​​ கோதுமை போன்ற உணவு தானியங்களின் விலை உயர்வைப் போலவே போக்குவரத்துச் செலவு,​​ கல்விச் செலவு,​​ மருத்துவச் செலவு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.​ தொலைக்காட்சிகளின் வர்த்தக விளம்பர ஒளிபரப்பினால் மக்களிடம் அதிகரித்துள்ள நுகர்வுக் கலாசாரத்தாலும் குடும்பச் செலவு என்பது எவராலும் கட்டுக்குள் வைக்க முடியாதபடி பெருகிக் கொண்டே வருகிறது.​ மானியங்களைக் குறைக்க வேண்டும் என்று அரசு நினைப்பதைத் தவறு என்று கூறிவிட முடியாது;​ அதேசமயம் மாதம்தோறும் 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய்வரை மட்டுமே ஊதியம் பெறுவோர் நிலைமைதான் என்ன?​ ​​ இந்த ஆட்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுப்போரும் அமல் செய்வோரும் இந்த விலைவாசி உயர்வால் சிறிது கூட பாதிக்கப்படவேயில்லை என்பது உண்மையே.​ அரசியல் களத்தில் வெற்றி,​​ தோல்வியாளர்களைத் தீர்மானிப்பது சாமானிய மனிதன்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.​ அந்த சாமானிய மனிதன் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுபவன்.​ பாதிக்கப்பட்டிருப்பவன்.​ அவனைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை.​ வலிய விலைவாசி யை அதிகரித்துச் சீண்டினால் விளைவு சாதகமாக இருக்காது!
கருத்துக்கள்

அழகிரி, தாலின் இருவரிடையே அடுத்த வழியுரிமையர் யார் எனப் போராட்டம் இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. மூத்தவருக்குக் கட்சித் தலைமையை அளிப்பதற்காக நடத்தப்படும் நாடகம்தான் இது. (கலைஞர் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் போட்டி என்றில்லாமல் அவரது குடும்பத்தினருக்கு இடையே மட்டும் போட்டி என்னும் சூழலை உருவாக்கியமையால்) போட்டியில் யார் தோற்றாலும் வெல்லப்போவது கலைஞரின் குடும்பத்தினர்தான் என்பதை அறிவர். எனவே, அடுத்த முதலமைச்சர் யார் என அறிவித்தது போல் அடுத்த தலைவர் யார் என அறிவிக்கவும் அதற்காக மூத்தவரின் ஈகங்களையும் திறமைகளையும் பட்டியலிட்டு இவரை விட வேறு யார் தகுதியானவர் எனக் கூறச் செய்வதிலுமே கட்சியின் கவனத்தைத் திருப்பும் வெற்றியே இது. கலைஞரைக் குறைவாக எடை போட வேண்டா.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக