வெள்ளி, 26 மார்ச், 2010

௧) வேறு யாரையும் தலைவராக ஏறக முடியாது என்றால் தன்னைத் தலைவராக அறிவிக்க பேரம் பேசுகின்றார் என்றுதான் பொருள். ௨.) அண்ணாவிற்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்க மாட்டோம் என்றவர்கள என்ன ஆனார்கள்? காலச் சூழலே இதைத் தீர்மானிக்கும். ௩.) இத்தகைய அறிவிப்பிற்கெலலாம் காரணம் கலைஞருக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் அவரது குடுமபத்தினரே இரு்க்க வேண்டும் என்ற எண்ணமே. அதற்கான ஆயத்தமே இது. உள் குடும்பச் சண்டை எனக் கருதினால் தவறு. ௪.) எல்லாப் பதவிகளிலும் ஒரு குடும்பத்தினரே இருபப்பது என்பது குடும்பத்தின் வல்லாட்சி மட்டுமன்று; சிறுபான்மைச் சாதியினரே தொடர்ந்து பிற சாதியினரை ஒடுக்கும் சமமற்றச் சமுதாயச் சூழலை உருவாக்கும் என்பதை யாரும் புரிந்து கொள்ள வில்லை.எனவே குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் பதவி ; அந்த ஒருவர் யார் என்பதை அக் குடும்பம் தீர்மானிக்கும் எனக் கொண்டு வரலாம். ஆனால். அப்பொழுதும் சிக்கல்தான். ஒற்றைக் குடும்பமாகக் கருதாமல் தனித் தனிக் குடும்பமாகக் கருதும் சூழலில் கலைஞர் என்ன செய்ய முடியும்? எனவே, அவர் தனக்குப் பின் யார் என அறிவிக்க வேண்டா. காலம் தீர்மானிக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக