சென்னை, மார்ச் 22: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பிலான பொற்கிழிகளை, முதல்வர் கருணாநிதி வரும் ஞாயிற்றுக்கிழமை (28-ம் தேதி) வழங்குகிறார். இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், இந்திய அளவில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு ரூ.5 லட்சம் பொற்கிழியுடன் தொல்காப்பியர் விருதும், அயல்நாடு வாழ் இந்திய அறிஞருக்கு தலா ரூ.5 லட்சம் பொற்கிழியுடன் குறள்பீட விருதும், 5 இளம் தமிழறிஞர்களுக்கு விருதுகளையும் குடியரசுத் தலைவர் ஆண்டுதோறும் அளிப்பார்.'2005}2006, 2006}2007 மற்றும் 2007}2008 ஆண்டுகளுக்கான தமிழ் அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான, பொற்கிழிகளை மாநில அரசே வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விழா வரும் 28}ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் நடைபெறுகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இந்த பொற்கிழிகளை வழங்குகிறார். குடியரசுத் தலைவரின் குறள்பீட விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டுக்கான ரூ.5 லட்சம் பொற்கிழி பின்னர் வழங்கப்படும்'' என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா, தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விரைவில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

விருதாளருக்கு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 3:01:00 AM
3/23/2010 3:01:00 AM


By மதுரைக்காரன்
3/23/2010 1:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 3/23/2010 1:50:00 AM