வெள்ளி, 26 மார்ச், 2010

"உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும்'



நமது நிருபர்​​சென்னை, ​​ மார்ச் 25:​ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று தலைமை நீதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள்,​​ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக ஆங்கிலம் உள்ளது.​ ஒரு சில உயர் நீதிமன்றங்களில் ஹிந்தியும் வழக்கு மொழியாக உள்ளது.சென்னை உயர் நீதிமன்றம்,​​ சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானம் மத்திய சட்டத் துறையின் பரிசீலனையில் உள்ளது.இந்த நிலையில் தமிழில் வாதாட அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.​ அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய உயர் நீதிமன்ற அதிகாரிகள்,​​ ""உயர் நீதிமன்றத்தில் தமிழிலும் வாதாடலாம்' என்று அனுமதி அளித்தனர்.இதையடுத்து, ​​ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடினர்.​ உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக தலைமை நீதிபதி அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் தெரிவித்த பதில்:உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடலாம் என்று நீதிபதிகள் குழுவோ,​​ தலைமை நீதிபதியோ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.குறிப்பிட்ட நீதிபதிகள் அவர்களின் அதிகார வரம்புக்குள்பட்டு தமிழில் வாதாட வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளனர்.​ இதற்கு சட்டப்பூர்வ அனுமதியோ,​​ அங்கீகாரமோ இல்லை.எனவே,​​ உயர் நீதிமன்றங்களில் வழக்கு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று தலைமை நீதிபதி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.தமிழில் வாதாடலாம் என்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துகள்:​​தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன்:​​ வழக்கறிஞர்களுக்கு தமிழில் வாதாட அனுமதி அளித்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்.​ தாய்மொழியில் வாதாடும் போது தனது தரப்பையும்,​​ வழக்கின் தன்மையையும் ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு:​​ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எந்த உத்தரவும் இல்லாமல் வாய்மொழியாக தமிழில் வாதாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.​ இதில் எந்த சட்ட முக்கியத்துவமும் இல்லை.ஆனாலும்,​​ உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை ஆக்க வேண்டும் என்ற பாதையில் எடுத்துவைக்கப்பட்ட முதல் அடியாக இதைக் கருதலாம்.​ தமிழ் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக இதுவே போதுமானதல்ல.இது தொடர்பாக சட்டப்படியாக அறிவிப்பாணை வந்தால் மட்டுமே,​​ உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்குமொழி என்ற அந்தஸ்தைப் பெறும்.மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் ஏகே.ராமசாமி:​ உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வாதிடும்போது ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும் என்று சட்டம் இல்லை.​ தமிழில் பேசுவதற்குத் தடையும் இல்லை.வழக்கறிஞர் விஜயேந்திரன்:​ வழக்குகளை அந்தந்த மாநில மொழிகளில் விசாரிப்பதே,​​ நீதியை உரிய முறையில் பெற்றுத்தருவதற்கான ஏற்பாடாக இருக்கும்.வழக்கு ஆவணங்கள்,​​ தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன.​ இவற்றை மொழிபெயர்ப்பு செய்த பிறகே உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவது சாத்தியமாகும்.​ இதற்குரிய ஏற்பாட்டை தமிழக அரசுதான் செய்ய வேண்டும்.
கருத்துக்கள்

கண்டிக்கத்தக்க இக்கருத்தைத் தமிழக அரசு நீக்கி, அனைத்து மன்றங்களிலும் தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும். செம்மொழி மாநாட்டிற்கு முன்னதாக இதனைச் செய்து முடிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 4:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக