வெள்ளி, 26 மார்ச், 2010

நீதிபதிகளின் கருத்து வேதனை அளிக்கிறது​​: இராம.​ கோபாலன்சென்னை, ​​ மார்ச் 25: திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தவறல்ல,​​ என்ற உச்ச நீதிமன்ற நீதிகளின் கருத்து வேதனையளிக்கிறது என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.​ கோபாலன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:""திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும்,​​ பெண்ணும் இணைந்து வசிப்பதோ எவ்விதத்திலும் தவறல்ல'' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.​ பாலகிருஷ்ணன்,​​ நீதிபதிகள் தீபக் வர்மா,​​ சவுகான் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை.​ சமுதாயத்தின் நம்பிக்கை,​​ அதன் சிறப்பு போன்றவற்றை கவனத்தில் கொண்டு இவர்கள் கருத்து தெரிவித்திருக்க வேண்டும்.திருக்குறள் காட்டும் கற்புநெறி,​​ கற்புக்கரசி கண்ணகி போன்ற தமிழகத்தோடு இணைந்துள்ள விஷயங்களை தூக்கி எறியலாமா?நீதிபதிகளின் கருத்து தேவையற்றது.​ வேதனையளிக்கிறது.​ இக்கருத்தை அவர்கள் திரும்ப பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

திரையுலகிலும் சாமியார்கள் உலகிலும் பரவியுள்ள தவறான ஒழுகலாற்றை நீதிபதிகள் (சிலரைக் காப்பாற்ற வேண்டும் நோக்கில் முன் கூட்டியே) வரிந்து கட்டிக் கொ்ண்டு வரவேற்பது கண்டிக்கத்தக்கது. கண்டனைகள் பெருகட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 3:52:00 AM

அன்பான பெரியோரே !....தளர்ந்து போகாதீர் !!....நீதிப்தி அவர் கருத்தை சொன்னால் என்ன ?...நம் பாரத தேசத்தில் புனிதமான ஏகப்பட்ட கண்ணகிகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் !!!....இனியும் வருவார்கள் ....புனிதத்துடன் வாழ்ந்து சிறபபடைவார்கள் !!!!

By rajasji
3/26/2010 2:08:00 AM

தமிழ்நாடு சிவசேனா கட்சித் தலைவர் குமாரராஜா, நித்தியானந்தர் வளர்ச்சியை பிடிக்காமல் சில சக்திகள், கிராப்பிக்ஸ் மூலம் பொய்யான மனிதரை நித்தியானந்தர் போல உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு பகுதிதான் நடிகையுடன் இருக்கும் வீடியோ காட்சி என்று தனது கையில் வைத்திருந்த அறிக்கையை படித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் குமாரராஜா. எந்த ஆதாரத்தை வைத்து வீடியோவில் உள்ள காட்சிகளை கிராப்பிக்ஸ் என்று சொல்லுகிறிர்கள்? இதுபற்றி நித்தியானந்தத்திடம் தொடர்பு கொண்டு பேசினீர்களா? உங்களுக்கும் நித்தியானந்தாவிற்கும் எங்த வகை தொடர்பு? அவரை நீங்கள் சந்தித்துள்ளீர்களா? அவருக்கு உங்களை தெரியுமா? இந்து மக்கள் கட்சி உள்பட நித்தியானந்தாவின் பக்தர்களும் இந்த வீடியோ காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அப்படி இருக்க நீங்கள் மட்டும் ஏன் அவருக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்? இது உங்களுடைய விளம்பரத்துக்காகவா? அல்லது அவரோடு உங்களுக்கு வேறு ஒப்பந்தம் உள்ளதா? என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் காமெடியாக அளித்த ஒரே பதில், வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவின் கிராப்பிக்ஸ் உர

By saab
3/26/2010 1:58:00 AM

என்ன செய்வது அங்கிள்? வேதனையாகத்தான் இருக்கிறது. அது இருக்கட்டும். நீங்கள் குர்ஆனை தமிழில் படித்து முடித்து விட்டீர்களா? ஏனென்றால், உங்கள் சிஸ்ய கோடி ஒருவர் தில்லு தில்லு என்று ரொம்பவும் துள்ளுகிறார். அவருக்கு நாங்கள் பதில் சொல்லி முடியவில்லை. இனி நீங்களே அவருக்கு பதில் சொல்லுங்கள்.

By Abdul Rahman - Dubai
3/26/2010 1:55:00 AM

குஜராத் மாநிலத்தில் 200 கிலோ வெடிபொருள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.​ இதுதொடர்பாக 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன் பிண்ணியில் குஜராத் முதல்வர் தீவரவாதி மோடிக்கு தொடர்புண்டா என உளவுத்துறை தீவிர விசாரணை நடாத்திவருகிறது.புனேயில் நடந்த குண்டு வெடிப்புகளை இவர்கள் தான் நடாத்தி இருப்பார்கள் என உளவுத்துறை சந்தேக படுகிறது. ​குஜராத் மாநிலம் வால்சாத் மாவட்டத்தில் வாபி என்ற இடத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.​ அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.​ ​ ​அதில் 4 பைகளில் தலா 50 கிலோ எடையிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் மற்றும் 600 டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.​ இதையடுத்து காரும்,​​ வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.​ ​ இதுதொடர்பாக காரில் வந்த 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.​ இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீஸார்

By maan
3/26/2010 1:54:00 AM

காஞ்சிக் காமக்கோடியின் காமக்களியாட்டங்களும், கொலைக் குற்றமும் வெளிப்பட்ட பிறகும் வாழாவிருந்த சங்க்பரிவார்களுக்கு நித்யானந்தாவின் நிழலுக அனுபவங்களை கண்டவுடன் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. நித்யானந்தாவிற்கு ‘ரா’ வில் தொடங்கும் நடிகையென்றால் காஞ்சிக்கு ‘எம்’ ’எஸ்’ நடிகைகளின் சேவைகள். கூடவே ‘அனு’வில் துவங்கும் எழுத்தாளரின் கசப்பான அனுபவங்கள். காரணம் புரிகிறது அவர் 'அவாள்’ ஆனதாலோ! அடப்பாவிகளா? ஒழுக்கச் சீரழிவிலும் ஜாதி வெறியா? காஞ்சிக் காமக்கோடி முதல் கடைக்கோடி அர்ச்சகன் வரை ஒழுக்கச் சீரழிவின் உச்சத்திற்கே சென்ற செய்திகள் அடிக்கடி வெளியான பின்னரும் அறியாமையிலிருந்து விடுபடாத பக்தகோடிகள் புரோகித கசமாலங்களின் காலடியில் வீழ்ந்தே கிடக்கின்றனர். மனிதனை மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால் உச்சத்தில் தூக்கிவைத்து கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள் வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள். இறைவன் யார்? மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்? அவனுக்கும் மனிதனுக்கு மிடையே இடைத்தரகர்கள் தேவையா? தான் படைக்கப்பட்டது ஏன்? என்பதை பற்றி உணராததன் கா

By man
3/26/2010 1:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக