சரியான தீர்வுகளைக் சுட்டிக் காட்டயுள்ளீர்கள்! தற்போதைய வருமான வரி முறையையே அடியோடு மாற்றினால் அரசிற்கும் நன்மை! மக்களுக்கும் நன்மை! அரசு, அரசு அமைப்புகளில் வேலை பார்ப்பவர்கள்தாம் முறையாக வரி கட்டி அல்லலுறுகின்றனர். எனவே, மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் மாதச் சம்பளம் ரூபாய் 20,000 முதல் ரூபாய் 50,000 வரை பெறுபவர்களிடம் மாதம் தோறும் வேறுபாடின்றி 1 விழுககாடு வரி பிடித்தம் செய்யப் பெற வேண்டும். அதற்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் அடுக்கு முறையில் வரி பெற வேண்டும். பிறரிடம் இதே முறையில் தாங்களாகவே வரி செலுத்தும் முறையைப் பினபற்ற வேண்டும். வருமான வரித் துறை என ஒன்று இல்லாமல் மக்கள் தாங்களாகவே வரி செலுத்தும் எளிய முறையைப் பின்பற்றினாலே அரசிற்கு ஆதாயம்தான். ஆனால், ஆளும் கட்சியினர் தனக்கு வேண்டாதவர்களை மிரட்ட முடியாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/11/2009 4:14:00 AM