ஞாயிறு, 7 ஜூன், 2009


இலங்கையில் அடுத்த கட்டப் போராட்டம்: பழ.நெடுமாறன்
தினமணி


விழுப்புரம், ஜூன் 6: இலங்கையில் நடைபெற வேண்டிய அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். "தமிழீழமும் நமது இன்றைய கடமையும்' என்பது குறித்த கருத்தரங்கில் பங்கேற்க சனிக்கிழமை விழுப்புரம் வந்த பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரன் அவரது சொந்த மண்ணில் நலமுடன் உள்ளார். அவர் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பார். இலங்கை ராணுவ முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் மின்சார வேலி அமைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மருந்துகள் கிடையாது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இளைஞர்கள் திரும்புவது கிடையாது. இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும். ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், சர்வதேச பத்திரிகையாளர்கள் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்துள்ளனர். அண்டை நாடான இந்தியா வாய் திறக்கவில்லை. இலங்கைத் தலைமை நீதிபதி கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இருக்கும் உணர்வுகூட இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இல்லை என்றார் பழ.நெடுமாறன்.

கருத்துகள்


இந்தியக் கூட்டமைப்பு நாடுகள் என்ற முறையில் நம் அரசமைப்பு இருக்க வேண்டும் எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது திரு லியோனியின் கருத்தைப் படித்ததும் நினைவிற்கு வருகிறது. இந்திய நிலப்பகுதி முழுமையும் ஒரு காலத்தில் தமிழ் நிலமாக இருந்தமையால் இதன் பெயரையே தமிழ் இந்தியா என மாற்ற வேண்டும் என்பது என் கருத்து. தமிழ் நாட்டின் முதன்மைக் கட்சிகள் பதவி அதிகாரத்தை மையமாகக் கொண்டே செயல்படுவதால் தமிழகம் திருந்த வாய்ப்பு இல்லை. தமிழ் உணர்வாளரக்ள் ஒன்று பட்டுச் செயலபட்டாலதான் உலகத்தமிழர்கள் யாவருக்கும் விடிவு கிடைக்கும். செய்தித் தலைப்பு இலஙகையில் அடுத்த கட்டப் போராட்டம் என உள்ளது. செய்தியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்டப் போராட்டம் என உள்ளது. எது சரி?


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2009 4:29:00 AM

Tamils here in Tamil Nadu are slowly losing their identity. My village is very small and remote. Even here they name their kids as Roshan and Sachien. They see only them as their Heros. India RAW's major aim is to dilute the Tamil Community and eradicate the identity of Tamils...THIS IS NOT POSSIBLE AT ALL. COULD BE POSSIBLE IF THEY PLAN FOR ATLEAST 2000 YEARS FROM NOW. India may not be in the map in another 50 years or so...All the states once developed, will try to get independent rule. And then further India will be renamed as UNITED STATES OF INDIA. After that may be just 15 or 20 years, the political map would be drastically changed.

By Leony
6/7/2009 2:56:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக