இந்தியன் போர்வையில ஒளிந்திருக்கும் சிங்களன் அவர்களுக்கு நம் வீட்டுக் குற்ற நிகழ்வுகளுக்கு நம் வீட்டவர்களிடம்தான் முறையீடு செய்ய இயலும். மேலும் குற்றவாளி நம் வீட்டிலேயே இருக்கும் பொழுது அடுத்த வீட்டுக் குற்றவாளியை வைது என்ன பயன்? எனவே, நீங்கள் முதலில் சிங்களன் என்பதை மறந்து மனிதன் என்பதை உணர்ந்து நடுநிலையோடு சிந்தியுங்கள்! புத்த நெறியைப் பின்பற்றுவது உண்மையென்றால் இனியேனும் அறநெறி வழி வாழுங்கள்! உயிர்க் கொலை புரியாதீர்கள்! செய்த பழிபாவச் செயல்களுக்குப் பரிகாரம் தேடுங்கள்! இனியேனும் தமிழர்களை உங்களில் ஒருவராக எண்ணுங்கள்! தமிழர் நாட்டிற்குக் காற்றடித்ததால் வந்து அடைக்கலம பெற்ற வழியில் பிறந்து தமிழர்களையே அவர்கள் நாட்டிலிருந்து விரட்டியடிப்பது மன்னிக்க இயலாப் பாவச செயல என்பதை உணர்ந்து திருந்துங்கள்!
அன்புடன் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/9/2009 4:50:00 AM
6/9/2009 4:50:00 AM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக