செவ்வாய், 9 ஜூன், 2009

தமிழுணர்வு தமிழகத் தலைவர்களிடம் இல்லை




பெங்களூர், ஜூன். 8-
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அந்த நாட்டு அரசையும், இந்திய அரசையும் கண்டித்தும், போரால் பாதிக்கப்பட்டு பட்டினியால் வாடும்தமிழர்களுக்கு மனித சமுதாயம் உதவவும், தமிழீழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்பெங்களூர் கிழக்கு ரெயில் நிலையம் அருகேஉள்ள மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம், மனித சங்கிலி போராட்டம்நடந்தது.
கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
புலிகளுடன் இறுதி கட்டப்போர் என கூறி சுமார் 25,000க்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கூண்டோடு படுகொலை செய்துள்ளது.
இது போல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கதலைவர் பிரபாகரனும், மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது. போரில் வென்று விட்டோம், புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால் இனிமேல்தான் தமிழீழ போராட்டம் தீவிரமடையப்போகிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பெங்களூரில் நேற்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசிய போது எடுத்த படம்.
இது போல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கதலைவர் பிரபாகரனும், மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது. போரில் வென்று விட்டோம், புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால் இனிமேல்தான் தமிழீழ போராட்டம் தீவிரமடையப்போகிறது.
போரில் தமிழர்கள் வசித்த நிலப்பரப்பை பறித்திருக்கலாம். ஆனால் ராஜபட்சவால் தமிழர்களின் ஈழக்கோரிக்கையை பறிக்க முடியாது.
இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியாவும், பிற நாடுகளும் அழுத்தமாக கூறி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
குடும்பமே அழிந்தாலும் தமிழீழத்துக்காக தொடர்ந்து போராடினார் பிரபாகரன். ஆனால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள், தமிழினம் அழிந்தாலும் என் குடும்பம் வளர பாடுபடுவேன் என்கிறார்கள். கர்நாடகத்தமிழர்களிடத்தில் உள்ளதமிழ்உணர்வு கூட தமிழக தலைவர்களிடம் இல்லை.
காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை வழங்கியது மன்னிக்க முடியாத குற்றம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக