திங்கள், 8 ஜூன், 2009

தொண்டைமான் மலையகத் தமிழர்கள் குறித்துப் பேசினதாகத் தெரிவித்துள்ளாரே தவிர ஈழத் தமிழர்கள் குறித்துப் பேசியதாகத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பில் இந்திய அரசிற்கே அதிகாரம் இல்லை என அவர்களின் கூட்டாளியான சிங்கள அரசு தெரிவித்த பின்பு மாநிலங்களவை உறுப்பினரால் என்ன செய்ய இயலும்? ஏதோ தன் மகளைச் சுற்றி அதிகார மையம் இருப்பதுபோல் காட்டத் தந்தை முயன்று அவரைச் சந்திக்கச் சொல்லி இவர்கள் சந்தித்துள்ளார்கள். அவ்வளவுதான்! செயற்கையாகத் திட்டமிட்டு அதிகார மையம் இருப்பது போன்று தந்தையார் செய்யும் முயற்சிகளுக்கு எல்லாம் ஊடகங்கள் முதன்மை அளிக்கத் தேவையில்லை. நாளும் மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் இத்தகைய நாடகங்கள் கண்டு களிப்புற்றுப் பொழுது போக்குவார்கள் எனக் காங்.கும கூட்டாளி அசோதிமுகவும் கருதினால் அது அவர்களையே ஏமாற்றிக் கொள்வதாகும். இதுவரை செய்த பாவங்கள் போதும் என்று அமைதியாக இருந்தாலேயே வெறுப்புணர்வு வளராமலாவது இருக்கும். பாவம் ஈழத் தமிழர்கள்!


வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/8/2009 3:48:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக