போர் நடத்தியதே இந்தியா என்னும் பொழுது ஐநாவில் இந்தியாவின் நிலைப்பாடு வேறு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? எனவே, சிங்கள காங்.அரசுகளுக்கு எதிராகக் கண்டனத் தீ்ர்மானம் கொண்டு வர அயல் நாடுகளை வற்புறுத்தி வெற்றி காண்பதில்தான் உண்மையின் வலிவு இருக்கும். மேலும், கலைஞர், 'தங்களின் கருத்துதான் அடியேனின் கருத்தும். பிறர் கருதுவதாகத்தானே எழுதியுள்ளேன். என் கருத்து என்று எதுவும் தெரிவிக்கவில்லையே! எனவே பிச்சை போடுவதை நிறுத்திவிடாதீர்கள்!' என்று ஒப்புக்கு எழுதிய மடலைப் பொருட்டாக எண்ணித் திரு செழியன் குறிப்பிட்டிருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் இநதியா என்றும் இந்திய அரசு என்றும் கூறி நமக்கு அவமானம் ஏற்படுத்திக் கொள்வதை விடக் காங். அரசு என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். துரோகிகளின் முகமூடி என்று கிழியுமோ அன்றுதான் அறக்கடவுளுக்கு நன்னாள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/8/2009 5:24:00 AM
By s.david selwyn
6/7/2009 11:41:00 PM