ஞாயிறு, 7 ஜூன், 2009

ஆயுத ஊழல் வழக்கு: பிரதமர் அலுவலகம் விளக்கமளிக்க
பாஜக கோரிக்கை
தினமணி


புது தில்லி, ஜூன் 7: ராணுவத் தளவாட ஊழல் வழக்கில் இடைத் தரகராக செயல்பட்டு கைதானவர் பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமாக இருந்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் இருந்து ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பில் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கியதில் ஊழல் நடத்திருப்பதாக வழக்கு உள்ளது. இந்த வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் நம்பியார், பிரதமர் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவருக்கு அவர் மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இது தவிர மிகுந்த கட்டுப்பாடுகள் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அவர் சாதாரணமாக வந்து சென்றுள்ளார். இது தொடர்பாக பிரதமர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்

இந்த நம்பியாருக்கு அந்த நம்பியார்தான் துணை. இவர் மீது 'விசாரிக்க' அவர எப்படி உடன்படுவார்? அல்லது இவர் மீது 'விசாரணை' மேற்கொண்டால் ஈழப் படுகொலைகள் வெளியே தெரியவரும் என்ற அச்சம் இருக்காதா? எப்படியோ போகட்டும் மக்களாட்சி! எவ்வாறோ மடியட்டும் மனித உயிர்கள்! என நாம் அலட்சியமாக இருந்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்! அடிமைகளாக இருக்கும் நமக்கு எதற்கு விழிப்புணர்வு? யார் ஆண்டால் என்ன? யார் மாண்டால் என்ன? என்று நமது 'வேலை'யில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாதா?

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2009 4:13:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக