இலங்கையில் உள்ள இசுலாமியர் வகைப்பாட்டை ந்ன்றாக விளக்கியுள்ளார். சிங்களவர்கள் என்னதான் இசுலாமியர்களுக்கு எதிராக நடந்து கொண்டாலும் பெரும்பான்மை இசுலாமியர்கள் தங்களைத் தமிழரிடமிருந்து வேறுபடுத்தியே எண்ணி வந்துள்ளனர். இங்குள்ளோர் 'இசுலாம் எங்கள் வழி! தமிழ் எங்கள் மொழி!' என வாழ்ந்தாலும் அங்குள்ளோரிடம் அந்த உணர்வு மேலோங்கி உள்ளதாகத் தெரியவில்லை. எனவேதான், சமயத்தால் இந்துக்கள், இசுலாமியர்கள் என்று சொல்லப்படாமல், இனவழி மொழி வழிச் சொல்லப்படும் பொழுது கூட அவர்கள் தமிழர்கள் இசுலாமியர்கள் என்று பிரித்துக் காட்டப்படுகின்றனர். இதனையே சிங்களர்களும் ஊக்குவிப்பதால், தமிழர்களுடன் இணைந்து உரிமைக்குப் போராடாமல், பிளவு பட்டுத் தனித்து இருக்கின்றனர். இவ்வாறான மொழி உணர்வு இனஉணர்வு இன்மையும் ஈழத்தமிழர் போராட்டங்களில் பின்னடைவுகளுக்குக் காரணமாக உள்ளது. தமிழைத்தாய் மொழியாகக் கொண்ட இலங்கை இசுலாமியர்களே உங்களைத் தமிழர்களாகவே நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்.!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/12/2009 2:20:00 AM