வியாழன், 11 ஜூன், 2009

இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கூட, அன்னிய நாட்டு அரசான சிறிலங்காவிற்கு ‘அளித்த உதவிகளை’ வெளியே சொல்ல முடியாத நிலை இந்திய அரசிற்கு இருக்குமானால் அது அங்கு நடந்த தமிழினப் படுகொலைக்கு துணை போயுள்ளது என்ற குற்றச்சாற்று உறுதியானது, உண்மையானது என்பதும், அதனை மெளனமாக ஒப்புக் கொள்கிறது என்பது அப்பட்டமான உண்மையாகி விட்டதே. அதனால்தானே அது ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் தன்னோடு நல்லுறவு இல்லாத பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு இனப் படுகொலை நடத்திய சிறிலங்க அரசை காப்பாற்றியது!

இதற்கான மன்மோகன் சிங்கை பாராட்டலாம். ‘உறுப்பினர்களே... உங்களுடைய கேள்விக்கு என்னிடம் பதிலில்லை’ என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். இலங்கைப் பிரச்சனை குறித்தும் தனக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதையும் அவர் பேச்சில் வெளிப்படுத்தியுள்ளார்.

மன்மோகன் கூறுகிறார்: “சிறிலங்க மக்களுடன் நமக்கு பல நூற்றாண்டுகள் பழமையான உறவு உள்ளது, அந்நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நலனில் நமக்கு ஆழ்ந்த அக்கரை உண்டு. தமிழர்களின் நலன் என்பது விடுதலைப் புலிகளை விட பெரியது” எ‌ன்று கூறியுள்ளார்.

யாருடன் இந்தியாவிற்கு நட்பு?

இலங்கையுடன் இந்தியாவிற்கு பல நூ‌ற்றுக்கணக்கான ஆண்டு பழமையான உறவு உள்ளது என்றால் எப்படி? யாரை வைத்து? தமிழரைத் தாண்டி இலங்கையில் வாழ்வோருக்கும் இந்தியாவில் வாழ்வோருக்கும் எந்த உறவு எந்த நூற்றாண்டில் இருந்தது? தமிழர்களின் நலனை என்றைக்கு இந்திய அரசு பேணிப் பாதுகாத்தது? இங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் 150 ஆண்டுகளுக்கு மேல் உழைத்த மக்களின் குடியுரிமையை ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டுத் தந்துவிட்டு வந்ததில் இருந்து, சம உரிமை கோரி போராடிய மக்களை ஒடுக்கி வதைத்து, பேரின பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கி, இனப் படுகொலை திட்டமிட்ட நடத்திவரும் சிறிலங்க அரசுகளுடன் இத்தனை ஆண்டுக் காலமாக கூடி குலாவிவரும் இந்திய அரசு, யாருடைய நலனை இதுவரை காத்துள்ளது? தமிழர்களின் நலனையா? அப்படி எப்பொழுதாவது நடந்திருந்தால் தமிழர்களை பகையாளிகளாகப் பார்க்கும் ஒரு மத, அரசியல் கொள்கை கொண்ட சிங்கள பேரினவாத சிறிலங்க ஆட்சியாளர்கள் எப்படி இந்தியாவை நட்பு நாடாக கருதியிருப்பார்கள்?

பிரதமர் அலுவலக அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் அறிக்கையில் உள்ள ஆங்கில வார்த்தை வசனங்களால் நடந்தது எதையும் மறைத்து விட முடியாது பிரதமர் அவர்களே. பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற போர்வையில் கொடூரமாக கொலை செய்வதை எல்லா விதத்திலும் ஆதரித்து அனுமதித்துவிட்டு, இப்போது அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கூறுவது எப்படிப்பட்ட மேன்மைமிகு கண்துடைப்பு என்பதை தமிழர்களும், உலகத்தவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

இனப் படுகொலையில் இந்தியாவின் பங்கு

சிறிலங்க அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இனப் படுகொலையில் இந்திய அரசின் பங்கு எந்த அளவிற்கு இருந்தது என்பதை அந்நாட்டு அமைச்சர்களில் இருந்து இராணுவத் தளபதி வரை அனைவரும் வெளிப்படையாகக் கூறி வெளிச்சம் போட்டு‌க் காட்டிவிட்டனரே.

webdunia photo FILE
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்த இனப் படுகொலையை தலைமையேற்று நடத்திய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச சண்டே லீடர் பத்திரிக்கைக்கு அளித்து பேட்டியிலேயே கூறிவிட்டார். அனைத்தும் இந்தியாவிற்கு தெரியப்படுத்திய பிறகுதான் மேற்கொள்ளப்பட்டது என்பதை உலகிற்கு போட்டுக் கொடுத்துவிட்டார். இந்தியாவின் ‘கவலை’ அப்பாவி மக்களைப் பற்றியதே என்று கோத்தபய கூறினாலும், “மருத்துவமனை கூட இராணுவ இலக்கே” என்று கூறிய அந்த மனித மிருகத்திடம்தான் அப்பாவி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நமது நாட்டு தூதர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர் என்பதெல்லாம் ஏற்கனவே பதிவான வரலாறுகள்.

எனவே ஒரு 500 கோடி ரூபாயை அளித்து இரத்தக் கறை படிந்த இந்தியக் கரங்களை கழுவி விட முடியாது. போரின் இறுதிக் கட்டத்தில் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்ட பல பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் சடலங்களை தடம் தெரியாமல் அழிக்கும் முயற்சி நமது ஜனநாயக நாட்டின் நல் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை உலகு அறியும். அது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வருகிறது.

நடக்கட்டும். சடலங்களின் தடங்களை அழித்துவிடலாம். ஆனால் அவைகள் பற்றிக்கொண்டிருக்கும் உண்மை வெளிப்பட்டே தீரும். அன்றைக்கு தான் இனப் படுகொலைக்கு துணை போன நமது நாட்டுத் தலைமையின் நாகரீகமற்ற நடவடிக்கைக்காக இந்திய நாடு வெட்கித் தலை குனியும் நாள் வரும்.

<< 1 | 2

RAJ
11-06-09 (01:08 PM)

THE DAY IS NOT SO FAR. THESE CHEAP POLITICIANS ARE READY TO SHED TEARS AND SHOW THEIR SIMPATHY TO ITALIANS AND NOT TAMILIANS. FOR THE SAKE OF THEIR OWN FAMILY GAIN RULERS OF TN WATCHING IT.
Report Abuse
RAJ
11-06-09 (01:08 PM)

THE DAY IS NOT SO FAR. THESE CHEAP POLITICIANS ARE READY TO SHED TEARS AND SHOW THEIR SIMPATHY TO ITALIANS AND NOT TAMILIANS. FOR THE SAKE OF THEIR OWN FAMILY GAIN RULERS OF TN WATCHING IT.
Report Abuse
prabagaran.m
11-06-09 (12:34 PM)

எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் மனித உரிமைகள் பற்றியோ,மனிதனின் உணர்ச்சிகள் பற்றி பேசவோ இந்தியாவிற்கோ அல்லது காங்கிரசுக்கோ அருகதையில்லை. ஒரு நாள் சிங்களன் சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து நமக்கு பெரிய ஆபத்தாக விளங்கப்போகிறான். அப்போது நாம் வருத்தப்படும்போது ஒருவரும் நமக்கு உதவமாட்டார்கள். என்பது மட்டும் தின்னம்.
Report Abuse
prabagaran.m
11-06-09 (12:28 PM)

எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் மனித உரிமைகள் பற்றியோ, மனிதனின் உணர்ச்சிகள் பற்றி பேசவோ அருகதையில்லை. இனி இந்தியன் உலகம் முழுவதும் அடி வாங்குவான்.
Report Abuse
naga
11-06-09 (12:28 PM)

இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டது ஒரு காலம் ஆனா‌ல் இன்று இந்தியர் என்பவர்கள் சுயநல மனிதர்களாக இருப்பது உலகம் அறிந்த விஷயமாகிவிட்டது
Report Abuse

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக