புதன், 1 ஜூலை, 2009

அழகிரியின் முயற்சியில் ராஜீவ் காந்தி மருந்துத் திட்டம்



புது தில்லி, ஜூன் 30: மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி முயற்சியில் ராஜீவ் காந்தி மருந்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மக்களுக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும், குறைந்த விலையில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதாகவும் இந்தத் திட்டம் அமையும். இத் திட்டத்தின்கீழ் மருந்து வாங்கும் மாநில அரசுகளின் மருத்துவத் துறைக்கு மத்திய அரசு மானியம் வழங்கும். மாநில அரசுகள் பொதுப் பெயர் மருந்துகளையே வாங்க வேண்டும். அவற்றையே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். இத் திட்டம் தொடக்கத்தில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் அமல்படுத்தப்படும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்

தொடரட்டும் நற்பணி! பெரும்பாலான மருந்துகள் 30 மடங்கிற்கும் மேலாக விற்கப்படுவதாக மத்திய அரசு பன்முறை தெரிவித்துள்ளது. எனவே, தரமான மருந்துகள் அடக்கவிலைக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கட்டும்! எளியோரின் நலமான வாழ்வு மலரட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/1/2009 4:10:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக