புதன், 1 ஜூலை, 2009

அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக வேழவேந்தன்
தினமணி


சென்னை, ஜூன் 30: அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக வேழவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: ""அறிவியல் தமிழ் மன்றம், தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக, கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மணவை முஸ்தபா இருந்து வந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த பல மாதங்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து தாமாக முன்வந்து விலகிக் கொள்ள விரும்புவதாக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை ஏற்று, அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மணவை முஸ்தபா விடுவிக்கப்பட்டார். அவரது இடத்தில் புதிய தலைவராக கவிஞர் கா.வேழவேந்தனை நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்

மொழி, இன உணர்வு மிக்க மரபுக்கவிஞர் வேழவேந்தன் அவர்கள்,தம் தகுதிக்குரிய பதவியைப் பெற்றுள்ளார். வாழ்த்துகள்! நல்வாய்ப்பு தந்த மாண்புமிகு முதல்வருக்கும் பாராட்டுகள்! பழந்தமிழில் இல்லா அறிவியல் செய்திகள் இல்லை என்னும் அளவிற்கு எண்ணற்ற அறிவியல் வளம் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. அவற்றை உலகெங்கும் பரப்பவும் மேலும் அறிவியல் துறைகளில் தமிழை வளப்படுத்தவும் பணி ஆற்றுவாராக! வாழ்க தமிழ்! வளர்க அறிவியல் தமிழ்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/1/2009 3:58:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக