வியாழன், 2 ஜூலை, 2009

உரிமைக்குரல்...
தினமணி






உதவித் தொகையை பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.10,000-மாகவும் பட்டமேற்படிப்பு படிக்கும் டாக்டர்களுக்கு ரூ.25,000-மாகவும் அரசு உயர்த்த வேண்டும் என்று கோரி, சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்த மருத்துவ மேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 3,650 பட்டமேற்படிப்பு, பயிற்சி, உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மருத்துவர்கள் வியாழக்கிழமை (ஜூலை 2) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
கருத்துக்கள்

சரியான கோரிக்கை. மருத்துவம் முடித்து விட்டுத் தங்கள் உழைப்பை நல்குகிறார்கள். பயிற்சியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் இந்த உழைப்பையும் கருத்தில் கொண்டு பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். சில ஆயிரம் மட்டுமே உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்துவதால் அரசிற்கு இழப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், ஐந்தாண்டு முடித்த பின்பும் அவர்களது வருவாயை நம்பியுள்ள குடும்பத்திற்கு உதவ இயலாமல் உள்ள மருத்துவர்களின் குடும்பங்கள் - கடன்பட்டும் இடர்ப்பட்டும் படிக்க வைத்த குடும்பத்தினர் - சிறிதேனும் மன அமைதி காண்பர். எனவே, மருத்துவர்களின் படிப்புக் காலத்தைக் கருத்தில் கொண்டும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்களைக் கருத்தில் கொண்டும் உதவித் தொகையை உடனே உயர்த்துக! மருத்துவர்களின் கவனம் தொழலில் மட்டுமே இருக்க வழிவகை செய்க!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/2/2009 4:21:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக