சனி, 4 ஜூலை, 2009

ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர முகாம்கள்:
தொண்டு நிறுவனம் புகார்
தினமணி

லண்டன், ஜூலை 3: இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களுக்கு நிரந்தரமான முகாம்களை அமைக்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளதாக அங்கு மறுவாழ்வு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனத்தினர் கூறியுள்ளனர். உள்நாட்டுக்குள் பிரச்னையால் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயரும் மக்களை எவ்வாறு கண்ணியத்துடன் நடத்த வேண்டும்; பாதுகாப்பாக குடியமர்த்த வேண்டும் என்று ஐ.நா. சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை உலக நாடுகள் பின்பற்றுவது அவசியம். ஆனால், இதை இலங்கை அரசு மதிக்கவில்லை. மாணிக் பண்ணைப் பகுதியில் நிரந்தர முகாம்கள் அமைக்கும் பணியில் தமிழர்களை எவ்வித ஊதியமும் இல்லாமல் ஈடுபடுத்தி ஐ.நா.வின் விதிமுறையை மீறிவருகிறது இலங்கை அரசு என்றும் தொண்டு நிறுவனத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், ஈழத்தமிழ் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள மாணிக் பண்ணைப் பகுதியின் குறிப்பிட்ட பகுதிக்குள் தங்களை மறுவாழ்வுப் பணியில் ஈடுபட இலங்கை அரசு அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நிரந்தர முகாம்கள் அமைக்கவில்லை: மாணிக் பண்ணைப் பகுதியில் கட்டப்படும் சிமென்ட் கட்டடங்கள் தமிழர்களின் பாதுகாப்பு கருதி கட்டப்படுகின்றன. அவற்றை நிரந்தர முகாம்களாகக் கருதக்கூடாது என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர முகாம்கள்: தொண்டு நிறுவனம் புகார்

First Published : 04 Jul 2009 01:28:51 AM IST

கருத்துக்கள்

ஈழத் தமிழர்களே! ஈழத தமிழர்களே! நீங்கள் இலங்கையில் பிறந்தது பாவமா? சம உரிமையுள்ள குடிமக்களாய் வாழ நினைத்தது பாவமா? மண்ணைப் பொன்னாக்கியது பாவமா? அறிவில் சிறந்து விளங்கியது பாவமா? அடிமையில் ஊறிய தமிழ் நாட்டு மக்களை நம்பியது பாவமா? ஆரியத்தில் மூழ்கிய இந்தியாவை நம்பியது பாவமா? உங்களுக்குக் கொடுமைகள் இழைப்பாரிடம் கேள்வி கேட்பார் இல்லையா? நீங்கள் உரிமையுள்ள மக்களாய் குடும்பத்தினருடன் மகிழ்ந்து நல்லறம் நடத்த வாய்ப்பு இல்லையா? சிங்களத்தையும் இந்தியத்ததையும் உலகத்ததையும் திருத்துவார் இல்லையா? உங்கள் இன்னல்கள் என்று நீங்கும்? உங்களைப் பிணைத்துள்ள விலங்குகள் என்று உடையும்? புலம்புவதைத தவிர வேறு தெரியாத ஈனப் பிறவியாய் நாங்கள் பிறந்து விட்டோமே! அதிகாரச் சுவையை இழக்க விரும்பாத தலைவர்களை நாங்கள் பெற்று விட்டோமே! உங்கள வாழ்விலும் தென்றல் வீசும் நாள் என்று வரும் எனப் புரியாமல் தவிக்கும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thilruvalluvan
7/4/2009 3:37:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக