செவ்வாய், 30 ஜூன், 2009

தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும்:
வீரப்ப மொய்லியிடம் கருணாநிதி கோரிக்கை



கருத்துக்கள்

முதலில் சென்னை நீதி மன்றம் என்பதைத் தமிழ்நாடுஉயர்நீதி மன்றம் என மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 'பத்தோடு ஒன்று பதினொன்று' என்று இல்லாமல் ஆட்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டும் பொழுதே இது போன்ற கோரிக்கைகளை வைத்தால் எளிதில் வெற்றி காணலாமே! தமிழக அளவில் தமிழில் உள்ள ஆணைகள். ஒப்பந்தங்கள், பட்டியல்கள், பெயர்ப் பலகைகள், கையொப்பங்கள் மட்டுமே செலலத்தக்கன என்றால் தமிழ்நாட்டளவில் தமிழே எங்கும் வீற்றிருக்குமே! ஏட்டளவில் உள்ள 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!' என்னும் முழக்கத்தை நாட்டளவில் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழக அரசிற்குத் தமிழ் உணர்வு இருப்பதாக மக்கள் உணருவார்கள்! தமிழ்நாடெங்கும் தமிழே வீற்றிருக்கும் நாள் எந்நாளோ, அந்நாளே தமிழர்க்கெல்லாம் பொன்னாள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
6/30/2009 2:02:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக