செவ்வாய், 20 அக்டோபர், 2009

ராஜபட்ச போர்க் குற்றவாளி: திருமாவளவன்



சென்னை, அக். 19: இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
மேலும் இக் கோரிக்கையை வலியுறுத்தி கட்சியின் சார்பில் வரும் 22-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர்களின் வாழ்நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு தனது அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் அவதூறுக்கு மாறாக தமிழர்களின் அவல நிலையை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்தியது.
அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. மக்களிடையே மன அழுத்தங்களும், அச்சமும் மோலோங்கி நிற்கின்றன. கால் வயிற்று கஞ்சிக்காக கையேந்தி நிற்கிறார்கள். மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா '' என்று சிலர் கதறி அழுதனர்.
2 பேர் மட்டுமே படுத்து எழக் கூடிய கூடாரங்களில் 10 பேர் வரை மனிதாபிமானமற்ற முறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டை சொற்களால் விவரிக்க முடியாது.
இலங்கை ராணுவ ஆட்சியின் கொடுமைகளை எம்.பி.க்கள் குழு உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு இலங்கை அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளது.
மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்காக உதவ வேண்டுமென்பது இன்றியமையாத ஒன்று. எனினும் இலங்கை இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அவசியம்.
பொருளாதார தடையும்... எனவே இலங்கை இன வெறி ஆட்சியாளர்களை குறிப்பாக, ராஜபட்ச மற்றும் அவரது சகோதரர்களை சர்வதேச போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு உலக அளவில் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தப்படுகிறது என திருமாவளவன் அதில் தெரிவித்துள்ளார்.
அதிருப்தி எதிரொலி: இலங்கை சென்றபோது அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுடன் திருமாவளவன் கைகுலுக்கியதையும், அவருடன் ஆலோசனை நடத்தியதையும் பல்வேறு தமிழ் அமைப்புகள் முன்னதாக குறைக்கூறி அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னை திரும்பிய ஒருவாரத்துக்கு பிறகு இத்தகைய அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கூட்டுக் களவாணிகள் கொலைகாரர்களான காங். உடன் இணைந்து கொண்டு இவ்வுண்மையைச் சொல்வதால் பயன் இல்லை. குறைந்தது ஈழத்தில் அவலங்களை நேரில் கண்ட பின்னாவது காங். அதன் தோழமைக் கட்சிகளுடனான உறவை முறித்துக் கொண்டு இவ்வுண்மையைச் சொன்னால் மக்கள் ஏற்பர். இல்லையேல் விரும்பாத ஓரங்க நாடகமாக எண்ணிப் புறக்கணிப்பர். எனவே, காங்.உடன் சேர்நத கரிசிற்குக் கழுவாயாக -பாவத்திற்குப் பரிகாரமாக - உடனே அதை விட்டு வெளியேறு அதன் முகத்திரையைக் கிழிக்கும் பணியில் திருமா ஈடுபடவேண்டும். இல்லையேல் காங்.கிற்குத தாளம் போட்டுக கொண்டு தன் எதிர்காலத்தைச் செழிப்பாகக் கழிக்கட்டும்!இரட்டை வேடம் வேண்டா!

அன்பு மிகுந்த இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/20/2009 3:09:00 AM

Here you go at least China determine to free Jammu Kasmire. Although China oppose Tamil ealam, China want to delare and accept Jammu Kasmire as an Independent county on January 1,2010 in the United Nations. It is in the Chinese new papers today. One new country born in 2010. China has veto power too which help China to Jammu people who stuggle last 50 years of fight.

By Fatima
10/20/2009 3:07:00 AM

siruthai illa eli.. pinna.. sri lanka vila pothikittu irundhuttu inga vandhu udhar vutta?..

By Maazmai
10/20/2009 2:53:00 AM

Good stunt by Thiruma. Why can't he express his feelings in Srilanka?

By Kirukku
10/20/2009 2:38:00 AM

tamilargal sethaaalum nee pilaithu kolvai valavaa un arikkaikakalaal! matrum un pechukalaal! vaalga viduthalai illatha "siru"thaigal

By samsun
10/20/2009 1:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக