செஞ்சி : செஞ்சி அருகே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்லவ மன்னர் களின் குடைவரைக் கோவில் பராமரிப் பின்றி அழிவின் விளிம் பில் உள்ளது. தொல்லியல் துறையினரின் கவனத்திற்கு வராமல் உள்ள இந்த குடைவரை கோவிலை பாதுகாக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லவ மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய் வதற்கு முன்பு வரை தமிழகத்தில் கட்டப்பட்ட கோவில்கள் செங்கல், மரம், உலோகம், சுண் ணாம்பு கலவைகளால் கட்டப்பட்டன. பல்லவ மன்னர்களின் காலத் தில் முதன் முறையாக பாறைகளை குடைந்து குடைவரை கோவில்களை அமைத்தனர். செஞ்சி அருகே உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் ஆகிய இடங்களில் உள்ள குடைவரை கோவில்களே தமிழகத்தின் முதன்மையான குடைவரை கோவில்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இதே போன்ற பழமையான பல்லவ மன்னர்களின் காலத்தை சேர்ந்த குடைவரை கோவில் ஒன்று செஞ்சியில் இருந்து 5 கி.மீ., வடமேற்கே மேலச்சேரி கிராமத்தில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தை மத்திலீஸ்வரர் என பெயரிட்டு கிராம மக்கள் வணங்கி வருகின்றனர். வரலாற்று ஆய்வாளர்களால் இந்த குடைவரை கோவில் சிகாரி பல்லவேஸ்வரம் என குறிப்பிடப்பட்டுள் ளது. நீளமான பாறையின் அடி முதல் உச்சி வரை சதுரமான இரண்டு தூண் களுடன் குடைவரையின் முன்பகுதி உள்ளது. உள்பகுதியில் அர்த்தமண்டபம், முகமண்டபம் என பிரிக்காமல் இரண்டும் சேர்ந்து ஒரே மண்டபமாக குடைந்துள்ளனர்.
கருவறையின் உள்ளே தாய்ப் பாறையில் 5 அடி உயர அளவில் 7 அடி சுற் றளவில் என்கோண வடிவிலான சிவலிங் கத்தை வடித்துள்ளனர். கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தின் வடக்கு பகுதி தாய்ப்பறையில் நின்ற நிலையில் பார்வதியின் உருவத்தை மிக நேர்த்தியாக புடைப்பு சிற்பமாக வடித்துள்ளனர். (இந்த அம்மனை பிரஹன்னா நாயகி என கிராம மக்கள் அழைக் கின்றனர்.) குடை வரையின் வெளியே தெற்கு பகுதி சுவற்றில் விநாயகரின் புடைப்பு சிற்பமும், கருவறைக்கு வெளியே சுப்பரமணியர், வள்ளி, தேவயானை சிலைகளும் உள்ளன. இவைகள் பிற்காலத்தை சேர்ந்தவை.
இப்பகுதியை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் விழாக்கள் நடத்தவும், பைரவர் உள்ளிட்ட சிலைகளை வைத்து வழிபடவும் குடைவரையின் முன் பகுதியை மறைத்து பிற்காலத்தில் கருங்கல் தூண் மற்றும் செங்கற்களை கொண்டு இரண்டு பிரிவுகளாக மண்டபத்தை கட்டியுள்ளனர். இவற்றிற்கு வெளியே கருவறையை நோக்கியபடி சிறிய மண்டபத்தில் நந்தியும், (இந்த மண்டபம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது.) நந்திக்கு பின்புறம் பலி பீடம், துஜஸ்தம்பமும், வடக்கே சிதிலமடைந்த கருங்கல் மண்டபமும், தெற்கே குடைவரை உள்ள பறையின் தொடர்ச்சியை ஒட்டி படிகளுடன் கூடிய சிறிய குள மும். குளத்தின் எதிரே கருங்கற் களால் கட்டப்பட்ட விக்ரகங்கள் இல்லாத இரண்டு சிறிய சன்னதிகளும், சன்னதிக்கு பின்னால் நான்கு தூண்களுடன், கலை நயமிக்க சுதை வேலைகளால் ஆன சிறிய உற்சவ மண்டபமும் உள்ளது.
தளவானூரில் உள்ள சத்ருமல்லேஸ்வராயம் கோவிலை பல்லவ மன் னன் நரேந்திரன் என்னும் சத்ருமல்லனும் (காலம் கி.பி. 580 முதல் 630), மண் டகப்பட்டில் உள்ள குடைவரைக்கோவிலை பல் லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனும் கட்டியுள்ளனர். இந்த இரண்டு இடங்களிலும் உள்ள குடைவரை கோவில்களின்முகப்பில் இரண்டு பக்கமும் துவார பாலகர்களை வடித் துள்ளனர். ஆனால் மேலச்சேரியில் உள்ள குடைவரை கோவிலில் துவார பாலகர்கள் இல்லை. எனவே மேலச்சேரியில் உள்ள குடைவரை கோவில் தளவானூர், மண்டகப்பட்டு குடைவரை கோவில்களுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வரலாற்றில் செஞ்சிக் கோட்டை நூலாசிரியர் பொறியாளர் மணி, மேலச்சேரி குடைவரை கோவிலை பற்றி குறிப்பிடுகையில், மகேந்திரவர்மனின் தந்தையான சிம்மவிஷ்ணு காலத்தில் இந்த குடைவரை கோவில் உருவாக்கப்பட்டது என வரலாற்று அறிஞர் சுப்புராயலு தனது ஆய்வில் தெரிவித்திருப்பதை மேற் கோள் காட்டியுள்ளார். இதன்படி மேலச்சேரி மத்திலீஸ்வரர் குடைவரைக் கோவில் 4 - 5ம் நூற் றாண்டில் உருவாக்கப்பட் டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த குடைவரையின் முன்பகுதியில் உள்ள வலது பக்க தூணில் பழமையான கல்வெட் டுக் கள் காணப்படுகின்றன. இந்த கோவிலின் வடமேற்கே உள்ள சிறிய ஏரியில் உள்ள பாறையிலும் சிதிலமடைந்த நிலையில் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த கல்வெட்டுக்களைப் பற்றிய சரியான ஆய்வுகள் இதுவரை செய்யவில்லை. ஊருக்கு வெளியே ஒரு கி.மீ., தூரத்தில் பாதை எதுவும் இல் லாமல் கரடு முரடான ஒத்தையடி பாதையில் ஏரி வாய்க் காலை கடந்தே இந்த கோவிலுக்கு பொதுமக் கள் சென்று வரு கின்றனர். குடைவரைக்கு வெளியே பிற்காலத்தில் கட்டப் பட்ட மண்டபங்கள் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதுடன், விஷப் பாம்புகளின் நடமாட்டமும் இருப்பதால் மிகக்குறைந்த எண்ணிக் கையிலேயே பக்தர்கள் வருகின்றனர். ஒன்பதாவது தலைமுறையாக இந்த கோவிலில் பூஜைகள் செய்து வரும் செவலபுரை கிராமத்தை சேர்ந்த முத்து குமாரசாமி குருக் கள் மட்டும் மேலச் சேரியை சேர்ந்த குப்பன் என் பவரின் உதவியோடு நித்ய பூஜைகளை செய்து வருகிறார். கோவிலுக்கு என சொத்துக்கள் இருந் தும் இவற்றில் இருந்து வருவாய் இல்லாமல் உள்ளது.
மாமல்லபுரத்திற்கு இணையான குடைவரைகளை கொண்ட செஞ்சி பகுதியில் மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம், இதுவரையில் இந்திய தொல் லியல் துறையின் கவனத்திற்கு வராமல் உள் ளது. இந்தியாவின் சிற்பக் கலை பெருமையை உலகுக்கு உணர்ந்தும் மற்றுமொரு குடைவரையை அழிவில் இருந்து காக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே தமிழக அரசு உடனடியாக தொல்லியல் ஆய்வா ளர்களை கொண்டு இந்த குடைவரை கோவிலை ஆய்வு செய்வதுடன், இதை அழிவில் இருந்து பாதுகாக்க மத்திய அரசின் தொல் லியல் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வரலாற்று ஆர்வலர்களும், மேலச் சேரி செஞ்சி பகுதி மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக