புதன், 21 அக்டோபர், 2009

2.45 லட்சம் தமிழர்களையும் சொந்த இடங்களுக்கு அனுப்பவேண்டும்: இலங்கைக்கு மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை



வாஷிங்டன், அக். 20: விடுதலைப் புலிகளுடனான சண்டையின்போது அந்த இடங்களை விட்டு வெளியேற்றி முகாம்களில் அடைத்து வைத்துள்ள 2.45 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை உடனடியாக சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விஷயத்தில் தான் கொடுத்த வாக்குறுதியை மீறி ராஜபட்ச அரசு செயல்படுவதாகவும் அது புகார் கூறியுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியா பகுதி இயக்குநர் பிராட் ஆடம்ஸ் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
போரின் போது இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேரை இந்த ஆண்டு இறுதிக்குள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னதாக இலங்கை அரசு உறுதி கூறியிருந்தது. இப்போது தான் சொன்னதற்கு மாறாக சுமார் 1 லட்சம் பேரையே முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக இலங்கை கூறியுள்ளது.
மே மாதத்தில் விடுதலைப் புலிகளை ஒடுக்கிய இலங்கை அதனுடனான சண்டையை நிறுத்திக்கொண்டது. அதற்கு பிறகு முகாம்களிலிருந்து சுமார் 27 ஆயிரம் பேரையே இலங்கை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது. இன்னும் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் முகாம்களிலேயே அடைபட்டு கிடக்கின்றனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் இதுபோல் இலங்கை தான் சொன்னதையே மறந்து முரணாக செயல்படுவதை ஏற்கமுடியாது என அதன் சர்வதேச நண்பர்கள் காட்டமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
போரின்போது இடம்பெயர்ந்து முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் உயிருடன் இலங்கை விளையாடுகிறது. இலங்கை வாழ் தமிழர்களின் நியாயமான குறைகளை களைய இலங்கை தவறுவதன் மூலம் தானாகவே அது பிரச்னையை தேடிக்கொள்கிறது என்று ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி, தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழத்தை உலக நாடுகள் ஏற்று வாழ்த்தி உதவுவதுதான். இதனை விரைந்து செய்க! இன்றே செய்க!தமிழ்த் தேசியத் தலைவர மேதகு பிரபாகரன் தலைமையில் ஈழ மக்கள் அரசு அமையட்டும்!

வாழ்க தமிழ் ஈழம்! வெல்க தமிழ் ஈழம்!

தமிழர் தாயகம் தரணியில் தலைசிறந்து தழைக்கட்டும்!

ஈழ - உலக நாடுகளின் நல்லுறவு வளரட்டும்!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2009 3:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக