வியாழன், 22 அக்டோபர், 2009

ஆஸ்திரேலியாவில் பூனையைக் கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை



மெல்போர்ன், அக்.20: முன்னாள் காதலியின் பெற்றோர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி, பூனையை கழுத்தை நெரித்துக் கொன்ற ஆஸ்திரேலியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருபவர் பவுல்மெகர் (24). இவரும் லின்னே போர்கன் என்ற பெண்ணும் கடந்த 2008-ம் ஆண்டு காதலிக்கத் தொடங்கினர். சில நாள்களிலேயே அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் வடக்கு மெல்போர்ன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள போர்கன் வீட்டுக்குள் நுழைந்த மெகர், பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, வீட்டில் இருந்த 4 வயது பூனையை தொலைபேசி வயரால் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த நீதிபதி ஹாம்ப்பெல், ஈவு இரக்கமற்ற முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மெகருக்கு 9 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டணை வழங்கி தீர்ப்பளித்தார்.

கருத்துக்கள்

பூனையைக் கழுத்தை நெரித்துக் கொன்றது கொடுஞ்செயல்தான். அதற்குத் தண்டனை அளித்ததைப் பாராட்டுவோம். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொத்துக்குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் வன்முறையாலும் நாளும் கொல்லும் சிங்கள இந்தியத் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் படைத் தளபதிகளுக்கும் துணை நிற்கும் பிற நாட்டின் பொறுப்பாளரக்ளுக்கும் யார் எப்பொழுது தண்டனை வழங்குவார்கள்? ஒரு வேளை, ஈழத்தில் வளர்ப்பு நாய்களும் செல்லப் பூனைகளும் கொல்லப்பட்டன என்று வழக்கு தொடர்ந்தால் நீதி கிடைக்குமோ!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2009 2:57:00 AM

Hi Kumar, Tell your central governmant to safeguard the Tamils in Sri Lanka first. Your government is helping the Sri Lankan gavernment to kill Tamils and then talk aboout the Indians in Australia

By Vaadaa Mannaaru
10/22/2009 2:32:00 AM

Indians are suffereing in Australia. But nobody is bothered. They have to consider Indians atleast at par with cats

By kumar
10/21/2009 2:34:00 PM

சுவிற்சர்லாந்தில் ஒரு இலங்கைத்தமிழர் அடைக்கலம் கோரினார். அவரது கோரிக்கையை பரிசீலிக்கும் பொருட்டு ஒரு நேர்காணல் இடம்பெற்றது. அப்போது அவர், "இலங்கை இராணுவம் குண்டு வீசி எனது வீட்டை அழித்தது" என்றார், அதிகாரி அதனைக் குறிப்பெடுத்துக் கொண்டார். "எனது தந்தை கொல்லாப்பட்டார்", "எனது தாயார் கொல்லாப்படார்" என கூறிக்கொண்டே போனார், அதிகாரியும் குறிப்பெடுத்த வண்ணம் இருந்தார். கடைசியாக "எனது நாயை கொன்றுவிட்டார்கள் என்றார்" உண்டனே சுதாகரித்துக் கொண்ட அதிகாரி "என்ன நாயைக் கொன்றுவிட்டார்களா" என்று கேட்டார். ஆமாம் எனது நாயை கொன்றுவிட்டார்கள் என்றார். அதிகாரி உடனே அந்நபருக்கு சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கொடுத்துவிட்டார்!

By MKSamy
10/21/2009 2:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக